தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, May 13, 2015

நீதிபதிகள் என்பவர்கள் யார் ?நீதியே உன் விலை என்ன ?


நீதிபதிகள் என்பவர்கள் யார் ?நாட்டில் வக்கீலுக்குப் படிப்பவர்கள் பொய் பேசுவதற்கு அனுமதி கேட்டு படித்தவர்கள் .அதற்குண்டான அனுமதியைப் பெற்றவர்கள்.அவர்கள் எவ்வளவு பொய் பேசினாலும் தவறும் இல்லை அவர்களுக்குத் தண்டனையும் இல்லை.
இந்திய அரசியல் சட்டம் அவர்களுக்கு சாதகமான கல்வியை போதிக்கின்றது..எந்த வக்கீலுக்கும் ..,தங்களுக்கு உண்மை தெரிந்தாலும் உண்மையைப் பேசினால் வெற்றிப் பெற முடியாது என்பது அவர்களுக்கேத் தெரியும்.
உண்மையை மறைக்க என்னவேண்டுமானாலும் செய்வார்கள் .அவர்களுக்கு அரசியல் சட்டம் அந்த அனுமதியை சட்டப் பூர்வமாக வழங்கி உள்ளது.

அதிகமாக பொய் பேசி வெற்றிப் பெற்ற வக்கீல்களைத் தான் நீதிபதிகளாக உயர் பதிவிகளுக்கான அனுமதியை அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது .
பொய்யே பேசிப்பேசி பழகியவர்கள் எப்படி நீதியை நிலை நாட்டமுடியும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
சட்டமும்,திட்டமும் சட்டத்தின் நடைமுறைகளும்,சட்டத்தின் தீர்ப்புகளும் எல்லா நீதிபதிகளுக்கும் பொதுவானது..
ஒரு நீதி மன்றத்தில் நீதி வழங்கும் தீர்ப்பு இன்னொரு நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்படுகின்றது .ஏன் அப்படி ?
நீதிபதியின் குற்றமா ? சட்டத்தின் குற்றமா ? பொய்யான வாதத்தின் குற்றமா ? பணம் படுத்தும் பாடா ? என்பதை மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் .

பணபலமும்,படைபலமும் பதிவிப் பலமும் உள்ளவர்கள்,என்ன தவறு செய்தாலும்,எவ்வளவு குற்றம் செய்தாலும் எந்த நீதி மன்றத்திற்கு சென்றாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிந்து கொண்டுள்ளது.
இப்போது சாதாரண மக்கள் தங்களுக்கு துன்பமோ இடையூறோ வந்தால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சட்டத்தை நாடிச்செல்ல முடியுமா ? நீதி மன்றத்திற்கு செல்ல முடியுமா ? நமக்கு சட்டம் சாதகமாக இருக்குமா ? என்பதை மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் .
மக்களே எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் எந்த துன்பமும்,துயரமும் அச்சமும்,பயமும் கொடுக்காமல் ஒழுக்கம்,உண்மை,நேர்மையுடன் வாழுங்கள்.சட்டம் உங்களை காப்பாற்ற தவறினாலும் ஆண்டவர் உங்களை நிச்சயம் காப்பாற்றுவார் .இதுதான் நீதி நடம்புரியும் இறைவன் என்னும் சத்தியத்தின் தீர்ப்பாகும்.
நீதியே உன் விலை என்ன ? என்னும் கேள்வி எழுந்துள்ளது .
எல்லோரையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

குற்றவர்,அப்பாவிகள் தண்டிக்கப்படுகின்றனர் என்று எவனாவதுபோர்கொடி தூக்கியதுண்டா!?தங்களுக்குஎ திரானவர்வ ென்றால்ச ட்டத்தை,நீதிபதியை லஞ்சம் வ ாங்கி ப க்கம்சாய்ந்ததாக த ூற்றுகின்றனர்!கொடுத்தத்தால்த்தானே அது இவர்களுக்கு தெரிந்துள்ளது!கேட்டது ,பார்த்தது,படித்தது என்று புழுகினால்,பொய்பேசினால் நம்ப நாம் தமிழகமக்கள் அல்ல!படித்த முட்டாள்கள் கொண்ட ஒரே இடம் தமிழ்நாடு என்றால் மிகையில்லை!தம்பக்கம் வென்றிருந்தால் சட்டத்தை,நீதிபதியை புகழ்ந்து நீதி வென்றது் என்பதும் என்று தங்கள் சார்பான நீதிபதியை புகழ் பாடியதும் ஓர வஞ்சகரே!

No comments:

Post a Comment