தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 25, 2015

முத்தான சத்துக்களை கொண்ட மாதுளை


முத்து முத்தான முத்துக்களைக் கொண்டு சத்துக்களை சுமப்பது மாதுளை. சுவையிலும் சிறந்தது. ஆரோக்கியத்திற்கும் உதவுவது..  100 கிராம் மாது
ளையில் 83 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இது ஆப்பிள் வழங்கும் ஆற்றலை விட அதிகமாகும். கொழுப்பு வகையான கொலஸ்டிரால் கிடையாது.

நார்ச்சத்துக்கள் மாதுளையில் உண்டு. 100 கிராம் மாதுளையில் 4 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது. இது ஜீரணத்திற்கும், குடல் செயல்பாட்டிற்கும் நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது மாதுளை. ஏனெனில் கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. வழக்கமாக மாதுளையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கும். 

ரத்த ஓட்டம் சீராக இருக்கும். புற்றுநோய் தொற்றாது. புனிகலாஜின் எனும் நோய் எதிர்ப்பு மூலக்கூறு மாதுளையில் காணப்படுகிறது. இதய பாதிப்புகளை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களில்  இருந்து உடலைக் காக்க வல்லது இது.சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் வைட்டமினான வைட்டமின் சி சிறந்த அளவில் உள்ளது. தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 17 சதவீதத்தை 100 கிராம் மாதுளை வழங்கிவிடும். 

இதனால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும் உடலுக்கு கிடைக்கும். தொடர்ந்து மாதுளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நீரிழிவு, லிம்போமா போன்ற நோய்களும் அண்டாது. பி குழும வைட்டமின்களும், வைட்டமின் கேயும் மாதுளையில் நிறைந்துள்ளது.தாது உப்புக்களான கால்சியம், காப்பர், பொட்டாசியம், மாங்கனீசு குறிப்பிட்ட அளவில் கிடைக்கிறது.

100 கிராம் மாதுளையில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை கணக்கிட்டால் 2 ஆயிரத்து 341 மைக்ரோ மூலக்கூறு டி.இ. அளவில் நன்மை தருவதாக கணிக்கப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியுள்ள மாதுளை அலாதியான சுவை வழங்கும். தோலை நீக்கி முத்துக்களை சாப்பிடலாம். மாதுளை ஜூஸ் உடலுக்கு ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் வழங்கும். சூப், ஜெல்லி, சாஸ் தயாரிப்பிலும் மாதுளை பயன்படுகிறது. 

கேக் உற்பத்தியிலும் சேர்க்கப்படுகிறது. மாதுளை சேர்த்து செய்யப்படும்  ஈரான் உணவான பெசன்ஜன் பிரபலம். இது மாதுளை பழச்சாற்றுடன் அக்ரோட்டு கொட்டைகள், பிலாப் அரிசியுடன் சேர்த்து சமைக்கப்படுகிறது. மத்திய ஆசிய நாடுகளிலும் மாதுளைச் சாறு பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது உணவுக்கு இன்சுவை அளிப்பதுடன், தனியாக சுவைப்பதைவிட இரண்டரை மடங்கு சத்து வழங்குகிறதாம்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2000&cat=500

No comments:

Post a Comment