தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 மே, 2015

விபத்தில் இறந்த சகோதரிகள் மறுபிறவி எடுத்த அதிசயம்!


இங்கிலாந்தில் உள்ள Hexham பகுதியில் வாழ்ந்து வந்த ஜான், ஃப்லோரன்ஸ் தம்பதியினரின் வாழ்வில் விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
1957ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி, அவர்கள் வாழ்வில் தீராத சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்று தங்கள் இரு மகள்களான ஜாக்குலின் (6), ஜோன்னா (11) ஆகியவர்கள் நண்பர் ஒருவருடன் தேவாலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் இருந்த பெற்றோர், பிரார்த்தனைகளின் மூலம் தங்கள் மனதை திடப்படுத்தினாலும், மீண்டும் தங்களுக்கு ஒரு அழகிய குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர்.
அவர்களின் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்த்தாற்போல விரைவிலேயே ஃப்லோரன்ஸ் கர்ப்பமடைந்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு துள்ளி குதித்த ஜான், மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு ப்லோரன்ஸை பரிசோதித்த மருத்துவர், அவர் வயிற்றில் ஒரு குழந்தை மட்டுமே உருவாகிவருவதாக தெரிவித்ததை ஜான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தனது மனைவியின் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் இருவர்களும் தங்கள் இறந்த குழந்தைகளின் மறுபிறப்பு என்றும் திடமாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் நடப்பது புரியாமல் விழித்துள்ளார்.
கத்தோலிக்க மதத்தில் மறுபிறவி பற்றி பேசவோ, அந்த கருத்தை ஏற்கவோ தடை உள்ளதால் அந்த மதத்தை சேர்ந்த ஜான் இவ்வாறு பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இது எதனையும் துளியும் கண்டுகொள்ளாத ஜான், தன் மனைவிக்கு இரட்டை பெண் குழந்தைகள் தான் பிறக்கும் என்றும், அவர்கள் இருவரும் தங்களின் இறந்துபோன ஜாக்குலின் மற்றும் ஜோன்னாவின் மறுபிறவி தான் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் ஜான் - ஃப்லோரன்ஸ் தம்பதியின் வாழ்வில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் திகதி, ஃப்லோரன்ஸ் ஜான் முன்கூட்டியே தீர்மானமாக கூறிவந்ததை போலவே இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் Gillian, Jennifer என்று பெயரிட்டுள்ளனர்.
Jennifer-ன் நெற்றியில் தங்களுடைய இறந்த குழந்தை ஜாக்குலினுக்கு விபத்து ஒன்றில் நெற்றியில் ஏற்பட்ட அடையாளம் இருந்ததை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளார்.
மேலும், குழந்தையின் காலில் ஜாக்குலின் பிறக்கும் போது இருந்த பிறப்பு அடையாளம் இருந்துள்ளது.
இந்நிலையில், குழந்தைகள் இருவரும் 3 மாத வயதை அடைந்தபோது Hexam பகுதியில் இருந்து Whitley Bay பகுதிக்கு இடம்பெயர முடிவெடுத்துள்ளனர்.
இதன் பின்னர் அந்த குழந்தைகள் இருவரும் சுமார் 4 வயதை எட்டும் வரை அவர்கள் Hexam பகுதிக்கு செல்லவே இல்லை.
பின்னர் இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் Hexam பகுதிக்கு சென்றபோது தான் பல அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெற தொடங்கியுள்ளது.
அப்போது, இந்த இரட்டை குழந்தைகள் தாங்கள் இதுவரை காணாத பகுதிகளை சரியாக அடையாளம் காட்டியுள்ளனர்.
அந்த இடங்கள் எல்லாம் இறந்து பொன குழந்தைகள் பழக்கப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்துபோன சிறுமிகள் படித்த பள்ளியை கடந்து செல்லும்போது, அந்த பள்ளியை பார்த்து அது தங்கள் பள்ளி என்று சொல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த குழந்தைகளின் செயலால் ஆச்சர்யமடைந்த பெற்றோர்கள், தங்களின் இறந்த குழந்தைகள் பயன்படுத்திய பொருட்களை எடுத்து காண்பித்துள்ளனர்.
அப்போது இறந்தவர்கள் விளையாடிய டெட்டி பியர் பொம்மைகளின் பெயர்களையும் மற்ற விளையாட்டு பொருட்களின் பெயர்களையும் இருவரும் சரியாக சொல்லி மேலும் அதிர்ச்சியளித்துள்ளனர்.
மேலும், இறந்த குழந்தைகள் விபத்தில் இறந்ததை உணர்த்தும் விதமாக இரட்டை குழந்தைகள் தரையில் படுத்து வினோதமாக விளையாடி வந்துள்ளனர்.
ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் அருகே கடந்து செல்கையில், ”அந்த கார் நம்மை இடிக்க வருகிறது” என்று கத்த தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவங்களை பற்றி குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், நாங்கள் அவர்கள் இருவரிடமும் சிறுவயதில், இறந்துபோன குழந்தைகள் பற்றி எந்த வித தகவலையும் அளித்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த குழந்தைகள் இருவரும் 5 வயதை எட்டிய போது, இறந்த குழந்தைகளை பற்றி பேசுவது படிப்படியாக குறைந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக