தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, May 24, 2015

ஸ்ட்ராபெரி சாப்பிடுங்கள்...ஆரோக்கியமாக வாழுங்கள்

நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.
ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன.
இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும்.
இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருள் சொக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு ஊட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழம் உண்ணும் பழமாக மட்டுமல்ல, அழகை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை கிரீம்களை பயன்படுத்தி சருமத்துக்கும், தோலுக்கும் தீங்கு விளைவிக்கும் அவற்றை பயன்படுத்துவதை விட, இயற்கையாக கிடைக்கும் இதுபோன்ற பழங்களை பயன்படுத்தினால் சருமத்தை இலேசாக வெளுக்க செய்யும் தன்மை கொண்டது.

No comments:

Post a Comment