தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஏப்ரல், 2015

நேதாஜி கொல்லப்பட்டார்: மெய்காவலராக இருந்தவர் பரபரப்பு தகவல்

குர்கான், ஏப். 16–

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
1945–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18–ந்தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதை அவரது குடும்பத்தினரோ, ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. விமான விபத்து சம்பவத்துக்கு பிறகு நேதாஜி ரஷியாவில் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை சமீபகாலமாக நீடித்து வருகிறது. மத்திய அரசால் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில் நேதாஜி விமான விபத்தில் பலியாக வில்லை. கொல்லப்பட்டார் என்று அவரது முன்னாள் பாதுகாவலர் ஜக்ராம் யாதவ் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார்.
இந்திய தேசிய ராணுவத்தில் சிப்பாயாக இருந்த 93 வயதான அவர் இதுபற்றி கூறியதாவது:–
நேதாஜியும், முக்கிய அதிகாரிகளும் சுதந்திர போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதை வீரர் என்ற முறையில் நான் அடிக்கடி கேட்டுள்ளேன்.
1945–ம் ஆண்டு நாங்கள் சிட்டகாங் சிறையில் இருந்த போது நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டதாக செய்தி வந்தது. இந்த செய்தியை நாங்கள் யாரும் நம்பவில்லை.
இந்திய தேசிய ராணுவ வீரர்களை தவறாக வழி நடத்த அவரது மரணம் பற்றிய செய்தி பரப்பப்பட்டது.
சீனாவின் விடுதலைக்கு பிறகு 1949–ல் சீன தூதுவர் ஒருவர் அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு வந்தார். அவர்தான் நேதாஜி ரஷியாவில் இருப்பதாகவும், இந்தியா திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். இதுபற்றி நேருவுக்கு தெரிவித்தபோது அதை நிராகரித்தார்.
நான் மட்டுமல்ல எனது தலைமையில் உள்ள எல்லோரும் நேதாஜி கொல்லப்பட்டதாகவே கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜக்ராம் யாதவ் 1943–44–ம் ஆண்டில் 13 மாதம் நேதாஜிக்கு பாதுகாவலராக இருந்தார்.
http://www.maalaimalar.com/2015/04/16124943/Netaji-killed-was-a-bodyguard.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக