தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஏப்ரல், 2015

தந்தையாகப் போகிறீர்களா? ஒரு குட்டி அட்வைஸ்!தமிழில் ஆலோசனை!இதெல்லாம் கொடுமை சரவணா!


தாயாக போகும் பெண்களை விட, தந்தையாக போகும் ஆண்களுக்கு தான் பயம் கலந்த சந்தோஷம் இருக்கும்.
ஏனெனில் பெண் என்பவள் ஒரு கருவை தனது வயிற்றில் சுமக்கிறாள். ஆனால், ஆண் மனைவியோடு சேர்த்து தனது குழந்தையையும் மனதில் சுமக்கிறார்.
இந்த இரண்டு உயிர்களையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் பயங்களை எல்லாம் போக்கி, ஒரு நல்ல தந்தையாக விளங்குவதற்கு தயார்படுத்திக்கொள்வது அவர்களின் கடமையாகும்.
1. தந்தையாக போகும் ஆண்கள், தங்கள் குழந்தைக்காக பாதுகாப்பான முறையில் வீட்டினை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது.
2. அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒவ்வாரு தந்தையும் சந்திக்கும் முக்கிய சவாலாகும்.
3. அதுவும், புதிதாக தந்தையாகப்போகிறவர்கள் இதனை சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. குழந்தை வந்தாலே தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். குழந்தை பிறந்த நேரத்தில், அதற்கென அதிக நேரம் மற்றும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் உங்கள் மனைவி உங்களிடம் அன்யோநியமாக இல்லாமல் போகலாம்.
ஏனெனில் குழந்தையை பார்ப்பதற்காக அவர்கள் நேரத்தை செலவிடுவதால், களைப்பும், உளைச்சலும் ஏற்படும். ஆனால் இது நிரந்தரம் அல்ல. குழந்தை வளர வளர இது மெதுவாக மாறும். அதற்கு உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும்.
5. பெற்றோராக மாறிய பின் பொறுப்புகள் கூடுவதால், அதற்கென செலவிடும் நேரமும் அதிகமாகும். அதனால் தங்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் இருக்கும் ஆண்கள் அதனை தூக்கி எறிந்துவிட்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
6. பிறக்கும் குழந்தைக்கு நாம் ஒரு நல்ல தந்தையாக விளங்குவோமா என்கிற பயம் இருக்கும். ஆதலால் நல்ல தந்தையாக விளங்குவதற்கான தனித்திறமைகளை முன்கூட்டியே வளர்த்துக்கொள்வது நல்லது.
தந்தையாகப்போகும் ஆண்களுக்கு பல்வேறான கவலைகள் எழுந்தாலும், கவலைகளை களைந்துவிட்டு தங்களை ஒரு நல்ல தந்தையாக வளர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளை கடைபிடிப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக