தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, April 17, 2015

மூட்டு வலியால் அவஸ்தையா? உங்களுக்கான சூப்பர் பயிற்சிகள்

பெரியவர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் பாடாய் படுத்தும் வலிகளில் ஒன்று தான் மூட்டு வலி.


உடல் எடை அதிகமாக இருப்பின் மூட்டு வலி ஏற்படும், முழங்கால் மூட்டுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதே இதற்கு காரணமாகும்.
மூட்டுவலிக்கு எளிதான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் குறைக்கலாம்.
Leg Extension
முதலில் நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும், பின்னர் ஒவ்வொரு காலையும் பொறுமையாக நீட்டி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து மடக்கவும்.
இதே போன்று 5-7 முறை செய்யவும், தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் வித்தியாசத்தினை காணலாம்.
Sit- Ups
கால்களை அகட்டி, கைகளை முன்நோக்கி நீட்டி, நாற்காலியில் உட்கார்வது போல செய்ய வேண்டும்.
சில நொடிகள் இதேநிலையில் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
இது போல் 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.
Lying and Leg Raising
தரையில் மல்லாக்கப்படுத்துக் கொண்டு வலது காலை மேல் நோக்கி உயர்த்தி 20 நொடிகள் வரை அப்படியே வைக்கவும், பின்னர் பழைய நிலைக்கு திரும்பவும்.
இதையே இடது காலுக்கு செய்ய வேண்டும், இதுபோல் 5-7 முறை செய்யவும்.
Leg Curl
தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு முழங்காலை பின் நோக்கி மடக்கி பின்பு நீட்ட வேண்டும்.
அடுத்த காலுக்கும் இந்த பயிற்சியை செய்யவும், இவ்வாறு இந்த பயிற்சியை 5 முதல் 10 நிமிடம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment