தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஏப்ரல், 2015

வேற்றுகிரகவாசிகளை தேடும் நாசா!

வேற்றுகிரகவாசிகளை தேடும் திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
நாசாவின் இந்த புதிய திட்டத்தின் மூலம், பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
நாசா அமைத்துள்ள இந்த குழுவில், உலகம் முழுவதிலுமிருந்து 12 பல்கழைக்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர்.
நாசாவின் விண்வெளி தொலைநோக்கி கெப்லர் இதுவரை, 1,000 க்கும் மேற்பட்ட வேற்றுக கிரகங்களை கண்டறிந்துள்ளது. இவற்றில் அளவில் பூமி போன்று உள்ள 5 கிரகங்களில் உயிர்கள் வசிக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கிரகங்களை கடந்து வரும் ஒளி கதிர்களை ஆராய்வதன் மூலம் அந்த கிரகங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக