தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, April 18, 2015

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்

பொதுவாக காலை உணவு சாப்பிடுவதை தற்போதைய காலக்கட்டத்தில் பலர் தவிர்த்துவிடுகின்றனர்.
அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் செல்கின்றனர். சிலர் ஆரோக்கியமற்ற உணவை வெளியிலும் சாப்பிடுகின்றனர்.
ஆனால் காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே காலை உணவை தினந்தோறும் சாப்பிட வேண்டும்.
மேலும் சில காலை உணவுகள் நம் அரோக்கியத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இட்லி
இட்லியை காலையில் சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், அத்தியாவசிய கலோரிகள் உடலுக்கு கிடைக்கும்.
இதனால் அன்றைய பொழுது நன்கு ஆரோக்கியமாக செல்லும்.
தோசை
இதில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது.
இது எளிதில் செரிமானமாகக்கூடியது. மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை உணவு தோசை.
வெண்பொங்கல்
கலோரிகள் அதிகமாகவும், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளது.
எனவே இதனை அவ்வப்போது காலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பழைய சோறு
அக்காலத்தில் நம் முன்னோர்கள் பழைய சோறில் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஆனால் தற்போதைய தலைமுயை பழைய சோறை சாப்பிடுவதில் நாட்டம் செலுத்துவதில்லை.
பழைய சோறு உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, உடலுக்கு ஆற்றலையும் வழங்கும்.
கம்மங்கூழ்
கம்மங்கூழை தினமும் காலையில் குடித்து வந்தால், இதயம், செரிமானம் ஆரோக்கியமாக செயல்படுவதோடு, புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும்.

No comments:

Post a Comment