தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

உங்க போனில் சார்ஜ் இல்லையா? இனி கத்தினால் சார்ஜ் ஆகி விடும்

ஜார்ஜியா தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்காக காகித ஒலிவாங்கி ஒன்றை தயாரித்துள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள்.
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த காகித ஒலிவாங்கி பலருக்கும் உதவியாய் இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலின் அளவானது ஒலிவாங்கியின் அளவை பொறுத்து மாறுப்படும்.
ஆனால் குறைந்த அளவிளான மின் ஆற்றலை கொண்டு முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய முடியாது.
அதிக சத்தம் ஏற்படும் இடங்களில் இந்த வகையான ஒலிவாங்கியை வைத்து மின் உற்பத்தியிலும் ஈடுபடமுடியும்.
தற்போது ஒரு சதுர மீற்றருக்கு 121 மில்லிவாட்ஸில் உற்பத்தி செய்யப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக