தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

தவிர்க்காமல் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!

நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு சில உணவுப்பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகள், பழவகைகள், பருப்புவகைகள் என அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கீழே கொடுப்பட்டுள்ள 10 உணவுகளை தவிர்க்காமல் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும்.
வெள்ளைப்பூண்டு
குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
வெங்காயம்
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள நோய்கிருமிகள் அழிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து மனிதர்களைக் காக்கிறது.
கேரட்
கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம், மேலும் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும்.
இதில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது.
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை
முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.
கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
மீன்
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.
வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் கறுப்பு மீன்கள், சாலமன் மீன்கள், இதர துனா போன்ற மீன்கள் சிறந்த பலன் அளிக்கும்.
நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.
மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்.
தேநீர்
தேநீர் அருந்தினால் உடலுக்கு ஒரு வித புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த தேநீரில் இஞ்சி சேர்த்து குடித்தால் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தேநீரில் உள்ள மக்னீசியம் நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி
பால், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது.
முட்டைகோஸ்
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.
உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸுக்கு புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக