தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 மார்ச், 2015

வசீகரிக்கும் அரண்மனைகள்: ஒரு முறை சென்று வாருங்கள் (வீடியோ இணைப்பு)


இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பக்கலைகளை பார்த்து பிரமித்துப்போவார்கள்.
பண்டைய காலங்களில் விதவிதமான பாரம்பரியங்களும், கட்டிட மரபுகளும் அரண்மனைகளில் பதியப்பட்டிருக்கின்றன.
அந்த கட்டிடக்கலைகள் இன்றுவரை இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள 3 கட்டிடக்கலையின் சிறப்புகள் பற்றி பார்ப்போம்,
மைசூர் அரண்மனை
பிரம்மாண்டமும், வரலாற்று பின்னணியும் கொண்ட மைசூர் அரண்மனை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.
மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, பதிணைந்து ஆண்டு கால முடிவில் 1912-ம் ஆம் ஆண்டில் கிருஷ்ணப்ப உடையாரால் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று அடுக்குகளை கொன்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன.
அரண்மனையை ஒட்டி 44.2 மீற்றர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது.
இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம். இந்த விதானத்தில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொம்மைகள் காணப்படுகின்றன.
தசரா திருவிழாவின் போது இந்த அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.சுற்றுலாப்பயணிகள் இந்த அரண்மனையில் அரச உடைகள் வைக்கப்பட்டுள்ள அறை, அரச ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் ஓவியக்காட்சி அறை போன்றவற்றை எந்த வித தடங்கலும் இன்றி மிக அருகில் பார்த்து மகிழலாம்.
பத்மநாதபுர அரண்மனை
பத்மநாதபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கி.மீ தொலைவில் தக்கலை என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்த அரண்மனை மேல் தளம், கீழ் தளம் , முழுவதிலும் மரத்தில் ஆனது, .ஆசியாவில் இது போல ஒரு சிற்ப கலைநயம் மிக்க அரண்மனை இல்லை என்பது இதன் சிறப்பு.
அரண்மனை சுற்று மதில் சுவர்கள் 15 அடி உயரம் இருக்கிறது. பின்புறம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் இயற்கை அரணாக அமைந்துள்ளது.
அரண்மனையின் உள்ளே அரசர் பயன்படுத்திய கேரள முழு மூலிகைகள் ஆனா கட்டில், தொங்கும் பித்தளை சர விளக்கு, 300 வருடங்களுக்கு முன் உள்ள கடிகாரம், சீன வணிகர்ககள் அன்பளிப்பாக கொடுத்த ஜாடிகள், டச்சு கார்கள் வணிகர்ககள் அன்பளிப்பாக கொடுத்த, மேசை, நாற்காலிகள் மற்றும் கலைநயம் மிக்க உணவருந்தும் கூடம் மரசிற்பங்கள், கண்ணாடி வேலைப்பாடு நிறைத்த ஒப்பனை அறைகள் போன்றவை சுற்றுலாப்பயணிகளை கவரும்.
இந்த அரண்மனை முன்னைய கேரளா அரசின் தலைநகரமாக இருந்தது. இது முழுவதும் கேரளா அரசின் பராம்பரியம் நிறைந்தது. அதனால் கேரளா அரசின் சுற்றுலா துறையினால் பராமரிக்கப்படுகிறது.
செட்டிநாடு அரண்மனை
செட்டி நாட்டிற்கு கிழக்கே வங்காள விரிகுடாவும் மேற்கே சிவகங்கை, திருப்பத்தூர் ஆகியனவும் தெற்கே தேவகோட்டையும் வடக்கே புதுக்கோட்டையும் எல்லைகளாக அமைந்து உள்ளன.
இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றான செட்டிநாடு அரண்மனையை டாக்டர் அண்ணாமலைச் செட்டியார் 1912-ம் ஆண்டில் இந்த அரண்மனையை கட்டினார்.
அக்காலத்தில் விளங்கிய தொழில் நுட்பத்தைப் பற்றி பல தகவல்களை நமக்கு அளிப்பதால், இது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டிடமாகக் கருதப்படுகிறது.
செட்டிநாடு அரண்மனை, செட்டிநாடு மக்களின் சிறந்த கலாசாரப் பெருமைக்கு, மிக உயரிய சான்றாக விளங்குகிறது.
செட்டியார்களின் விருப்பத்திற்குரிய பாரம்பரிய பாணியே இங்கு காணப்படுகிறது. கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து, இவ்வரண்மனை கட்டுமானத்திற்கு மூலப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள் மற்றும் திண்டுகள் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்பட்டதால், இவை இக்கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.
அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. எனினும், இது, வெவ்வேறு வகையான கலைகள் மற்றும் பாணிகளைக் கொண்டுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக