தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 24, 2015

கத்தரிக்காயின் மருத்துவ பயன்கள்

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிக சத்துக்களும் அடங்கியுள்ளது.
கத்தரிக்காயில் ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்துள்ளன.
100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.
கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.
கத்தரிக்காயில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டம் இதயத்தில் சீராகப் பாய உதவுகின்றன.
மேலும் இந்த நியூட்ரியண்ட்டுகள் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஞாபக சக்தியை கூர்மையாக வைத்திருக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது.
கத்தரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
இதில் உள்ள மெட்டபாலிசம் ஸ்பைக் கலோரிகளை எரிக்க வல்லது, எனவே கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறையும்.
அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது.
இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.
மேலும், பைல்ஸ் என்னும் மூல வியாதிகளைப் போக்குவதற்கு கத்தரிக்காயின் பச்சைக் காம்புகள் பயன்படுகிறது.

No comments:

Post a Comment