தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மார்ச், 2015

ஆண்மையை அதிகரிக்கும் அருமருந்து



இயற்கையின் கொடையான தேங்காய் பல்வேறு நோய்களில் இருந்து தடுத்து நமது உடல்நலத்தை பாதுகாக்கிறது.
பொதுவாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இளநீர் என்றால் பிடிக்கும்.
ஆனால் தேங்காய் ஆபத்தானது என அதனை தவிர்ப்பவர்கள் ஏராளம்.
குறிப்பாக இன்றைய காலகட்டதில் பலரும் சர்க்கரை நோயாளிகள் தேங்காய் வாங்குவதையே தவிர்த்து விடுகின்றனர்.
ஆனால் இந்த தேங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு வினை என்றாலும், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
தேங்காயில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் உள்ளன.
தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.
தேங்காயின் மகத்துவங்கள்
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.
தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
தேங்காய் பால்
தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.
கல்லுரல் அல்லது மிக்ஸியை நன்றாகக் கழுவித்துடைத்து, துருவியை தேங்காயையும்(2 தேங்காய்) அரிசியையும்(2 டீஸ்பூன்) போட்டுச் சேர்த்து நன்றாக அரைத்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைப் பிழியவும்.
முழுவதையும் பிழிந்துவிட்டு, அந்தத் தேங்காயை மறுபடியும் சுமார் 1 கப் நீர் விட்டு, நன்றாக அரைத்துப் பிழியவும்.
முதலில் பிழிந்து வைத்துக் கொள்ளப்பட்ட பாலையும், இரண்டாவதாக பிழிந்த பாலையும், ஒரு மெல்லிய வெள்ளைத் துணியிலோ அல்லது சல்லடையிலோ வடிகட்ட வேண்டும்.
பிறகு வாணலியில் தேங்காய்த் துருவலோடு சர்க்கரை/வெல்லத்தை(1 கப்) மறுபடியும் கொஞ்சமாக நீர் வீட்டு அரைத்து, துணியில் போட்டு, ஒட்டப் பிழிந்து வடிகட்டி, பாலுடன் சேர்த்து வைக்கவும்.
பாலைக் கரண்டியால் அடிக்கடி கிளறிவிட்டு, நல்ல சூடு வந்ததும், சர்க்கரையை அல்லது வெல்லத்தைப் போட்டுக் கிளறி விட்டு, கொதி வரும் சமயங்களில் இறக்கி, ஏலக்காய்பொடியை(தேவையான அளவு) போட்டால் தேங்காய் பால் ரெடி.
பயன்கள்
தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.
வறட்டு இருமல் சரியாகும்.
தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
தேங்காய் சட்னி
தேங்காய், பச்சைமிளகாய், சிறிய வெங்கயாம் - 2, இஞ்சி போன்றவற்றை அம்மியில் வைத்து நேவாக அரைக்கவும்.
தேவையான அளவிற்கு மேலே அரைத்ததில் தண்ணீரை சேர்க்கவும்.
அடுப்பில் மிதமான சூட்டுடன் வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, கருவேப்பில்லை, வெங்காயம் கொண்டு வதக்கவும்.
ஒரு நிமிடம் வதக்கியவுடன் மேலே அரைத்ததை கொண்டு தாளித்தால் சுவையான தேங்காய் சட்னி தயார்.
பயன்கள்
செரிமான பிரச்சனை வருவதை தவிர்க்கும்.
ஆண்மையை அதிகரிக்க உதவும்.
கர்ப்பிணிகளும் இதை சாப்பிடுவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக