தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, February 22, 2015

கேன்ஸர் பாதிப்பை அதிகரிக்கும் சூரிய வெளிச்சம்!

தோலில் உள்ள மெலனின் நிறமணிகளுக்கு சேதம் விளைவித்து தோலில் பாதிப்பை ஏற்படுத்தி கேன்ஸர் நோய் ஏற்படுவதை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அமைந்துள்ள Yale பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பீச்சில் அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கே இந்த ஆபத்து அதிகம் இருப்பதாகவும், சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதன் மூலம் மேலதிக பாதிப்புக்களை தவிர்க்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சூரியனில் இருந்து வரும் UV கதிர்கள் தோலிலுள்ள கலங்களை ஊடுருவி DNA இலும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment