தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 பிப்ரவரி, 2015

உலகின் மிகப்பெரிய சோலார் டெலஸ்கோப்

சோலார் தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் (வானியல் தொலைகாட்டி) ஹவாய் தீவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
Daniel K Inouye Solar Telescope (DKIST) எனப்படும் இத்தொலைகாட்டியை நிர்மாணிப்பதற்கு 344மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 2019ம் ஆண்டளவில் இதன் கட்டுமாணப்பணிகளை முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் 4.24 மீற்றர் அகலம் கொண்டதும் 75 மில்லி மீற்றர்கள் தடிப்புடையதுமான தளவாடி பயன்படுத்தப்படவுள்ளது.
இத்தொலைகாட்டியின் மூலம் 100 கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள ஒரு அங்குல விட்டம் கொண்ட சிறிய நாணயத்தினையும் துல்லியமாக கண்டறிய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக