தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, February 24, 2015

ஆராய்சி செய்தி அழகு கொஞ்சும் மென்மையான இதழ்கள் வேண்டுமா? இதோ டிப்ஸ்




பெண்களின் உதடுகள் அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் கூடும்.
அதனால் பெண்கள் தங்களை அழகுபடுத்தும்போது, உதட்டிற்கு எந்த மாதிரியான லிப்ஸ்டிக் போட்டால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்து அழகுபடுத்த வேண்டும்.
குறிப்பாக ஆடைகளுக்கு தகுந்தவாறு லிப்ஸ்டிக் கலரினை பயன்படுத்த வேண்டும்.
செயற்கை ரசாயனங்களை பயன்படுத்தி உதடுகளை அழகுபடுத்துவதை விட, இயற்கையான உணவுகள் பலவற்றின் மூலம் உதடுகளை அழகாக்கலாம்.
மேலும் உதட்டில் ஏற்படும் வறட்சி, பொலிவிழந்து காணப்படுதல் போன்றவற்றை சரி செய்யலாம்.
தேன்
லிப் பாம்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக தேன் விளங்கும். ஏனெனில் தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது உதடுகளுக்கு தடவி வந்தால், ஒரு வாரத்தில் உதடுகளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.
அவகேடோ
அவகேடோ பழத்திலும் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்கும் குணம் இருப்பதால், இதனை உதடுகளில் தேய்த்து ஊற வைத்து பின் கழுவுங்கள்.
தயிர்
தயிர் பால் பொருட்களில் ஒன்றான தயிரில் ஏற்கனவே எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.




No comments:

Post a Comment