தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, February 14, 2015

காதல்...இரு இதயங்களின் சங்கமம்-காமதேவனுக்கான பூஜைத் திருவிழா வாழ்த்துக்கள்!


காதல் என்ற சொல்லே புனிதமானது, அழகானது, அற்புதமானது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
மலரினும் மெல்லிது காதல்…காதல் இல்லாத உயிரினம் எதுவும் இல்லை…ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவரும் காதலித்துக் கொண்டு தான் இருக்கின்றனர், இதனை யாராலும் மறுத்துவிட முடியாது.
காதலர் தினம் என்றவுடன் நினைவுக்கு வருவது ரோஜாக்களும், பரிசுப்பொருட்களும் தான்.
அன்றைய தினம் இந்த உலகமே சொர்க்கமாக மாறிவிடும் காதலர்களுக்கு…புதிதாக பிறந்த நபர்களை போன்று பூரித்து போவர்.
காதலை பரிமாறி கொள்ளும் இந்த நாள் எப்படி வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
ரோமாபுரியை சேர்ந்த வேலண்டைன் என்ற பாதிரியாரின் நினைவு நாள், முதலில் அன்பை தெரிவிக்கும் தினமாக அனுசரிக்கப்பட்டது.
ஆனால் இந்த நாளை காதலர்களே அதிகம் கொண்டாடியதால், காலப்போக்கில் காதலர் தினமாக மாறிவிட்டது.
காதலர்களின் பார்வையில்
காதலர் தினம் வருகிறது என்றால் ரோஜாக்கள் கூட இன்னும் சற்று அழகாக மலரும்.…குறிப்பாக ரோஜாக்களை விட காதலர்களே அதிகம் ஜொலிப்பர்.
இந்நாளை திருமணமானவர்களும் கொண்டாடுவார்கள், ஏன் வயதான தம்பதிகளும் கொண்டாடலாம், ஆனால் இவர்களின் கொண்டாட்டம் சற்று வித்தியாசமாக இருக்கும்.
ஏனெனில் இளம் வயதினரே இந்நாளின் நாயகர்களாக இந்த சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக இத்தினத்தில் அதிகளவில் லாபத்தை சம்பாதிக்க எண்ணற்ற வணிக நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவிப்பர்.
மேலைநாடுகளில் காதலர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடுவர்...இத்தினத்திற்காக காத்திருந்து திருமணம் செய்து கொள்பவர்கள் ஏராளம்.
ஆனால் ஆசிய நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டினாலும், எதிர்ப்பவர்கள் ஏராளம்.
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இத்தினத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது, இந்தியாவில் இத்தினத்தில் சுற்றுத்திரியும் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது, நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வேடிக்கை நிகழ்வுகளும் நடைபெறும். 
இந்த நாள் தேவைதானா?
இன்றைய தினத்தில் காதல் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
ஒரு பக்கம் கொண்டாட்டம் என்றாலும், மறுபக்கம் சமுதாய சீரழிவு என்றே பலரும் கருதுகின்றனர்.
உலகளவில் மற்ற நாட்களை விட காதலர் தினமே அனைவராலும் கொண்டாடப்படுகிறது, கூடவே நிராகரிப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில், இந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, ஆனால், ஆசிய நாடுகளில் இந்த தினத்திற்கு போர்க்கொடி தூக்குபவர்களே ஏராளம்.
காதல் என்றாலே பெரும்பாலான பெற்றோர்கள் வெறுக்கின்றனர்… பொது இடங்கள் என்றுகூட பாராமல் காதலர்கள் நடந்து கொள்ளும் விதமே இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
காதல் புனிதமானது தான், ஆனால் ஒரு சில நபர்கள் கொச்சைப்படுத்துவதால் ஒட்டுமொத்த காதலையே வெறுத்து ஒதுக்கும் நிலை தான் உள்ளது.
இவர்களின் அநாகரீகமான செயல்களால் சமுதாயத்தில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரும் பாதிக்கப்படுகின்றனர்.
காதல் என்பது அன்பின் வெளிப்பாடு….இந்நாளில் தாய்-மகன், தந்தை-மகள், நண்பர்கள் என ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்… ஒவ்வொரு நாளையும் நீங்கள் காதலித்தால் வாழ்க்கை உங்களை காதலிக்க ஆரம்பித்து விடும்.

Happy Valentines Day


No comments:

Post a Comment