தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மகா சிவராத்திரி விழா..


த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்
பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க சிவபெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள்பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்ல மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் சிறப்பு..
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை சிவராத்திரி என்கிறோம்.வருடத்தின் பன்னிரண்டு சிவராத்திரி நாட்களில், மகிமை மிக்க மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியையே மகா சிவராத்திரி என்கிறோம்.
மதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையைச் சாராமல், அறிவியல் ரீதியாகவே அனைவருக்கும் ஆன்மிக வளர்ச்சிக்குத் துணைபுரியும் இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். விஞ்ஞான ரீதியாகவே மகா சிவராத்திரி நாள், ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கிறது.
மகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது.
பல்வேறு புனிதத் தலங்களிலும் ஆலயங்களிலும்
மகா சிவராத்திரி விழாகொண்டாடப்படுகிறது.
உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.
அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.
உமையவள் தான் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெற்று சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்திக்க இறைவனும் அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் ஆகியோர் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து இறைவனின் அருள்பெற்றார்கள்..
தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது।
இவ்வாறு சிவபெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும்.
பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.
தேவி தவமிருந்து இடப்பாகம் பெற்ற நாள்,
அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்,
கண்ணப்பர் கண்ணை அப்பி முக்தி பெற்ற நாள்,
பாகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகிற்கு கொண்டு வந்த நாள்
என்று சிவராத்திரி நாளின் சிறப்புக்காக பல்வேறு ஐதீகங்கள் உள்ளன.
  • ஈழம் ரஞ்சன்'s photo.
  • Muthu Moorthy's photo.உயிருள்ள, உயிரற்ற அனைத்து ஜீவ ராசிகளிலும் உள்ளவன் சிவன். 
  • வாழ்க்கை என்றால், பிறப்பு, இறப்பு இருக்கும். அதற்கு இடையே உள்ள காலத்தில் மனோபலம், தைரிய பலம் நமக்கு தேவைபடுகிறது. இந்த இரு சம்பவத்தின் இடையே உள்ள காலத்தில் வாழ்க்கையின் போது, பரமாத்வாவை தினமும் நினைக்கும் போது நமக்கு சிவனின் அருள் கிடைக்கும்.
    சிவன் அனைவருக்கும் சமமாக நன்மையை வழங்குகின்றான்
  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக