தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, January 24, 2015

தாங்க முடியாத வயிற்று வலியா? இதோ அருமருந்து

சமையலறையில் மறைந்திருக்கும் சீரகம் பல்வேறு விதமான வியாதிகளுக்கு தீர்வாக அமைகிறது.
சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். எடையும் குறையும்.
சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும்.
சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று சாப்பிட்டால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். சீரகத்தை மென்று சாப்பிட்டாலே வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும்.
நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டு காய்ச்சி எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறிந்துவிடும்.
சீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும். மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
சீரகம் வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வர பலம் கூடும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும்.
இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும்.
நரம்புத்தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று பொருமல் வற்றி நலம் பயக்கும்.
சீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடி செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

No comments:

Post a Comment