தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 ஜனவரி, 2015

அழகுக்கு அழகு சேர்க்கும் “முல்தானி மெட்டி”


பொதுவாக பெண்கள் தங்களை அழகுப்படுத்தி கொள்வதற்கு பலவிதமான கிரீம்களை பயன்படுத்துவர்.
ஆனால் சில நேரங்களில் அந்த கிரீம்கள் சருமத்துடன் ஒத்துப் போகாமல் இருந்தால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
எனவே இயற்கையான பொருளை முகத்திற்கு கையாள்வது நல்லது. அதுபோல் இயற்கையான ஒரு ஒப்பனை பொருள் தான் முல்தானி மெட்டி. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றத, இதனால் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படுவதில்லை
இதில் அடங்கியுள்ள மெக்னீஷியம் குளோரைடு தோலின் நிறத்தையும், அழகையும் அதிகரிக்கிறது.
முல்தானி மெட்டி பேஸ் பாக்
முல்தானி மெட்டியுடன் தயிர், க்ரீம், பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு போன்றவை சேர்த்து, வீட்டிலிருந்தபடியே நாம் பேஸ் பேக்குகளை தயாரிக்கலாம்.
முல்தானி மெட்டி ஸ்கரப்பர்
முல்தானி மெட்டி துடைத்து தேய்த்து கழுவும் ஸ்கரப்பராகவும் பயன்படுகிறது.
இதை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், வெண்புள்ளிகளையும் நீக்குகிறது.
மேலும் நமது சருமத்தில் உள்ள தூசிகள், அழுக்குகளை அகற்றி சருமத்தை பொலிவடையச் செய்கிறது.
எண்ணை பசைக்கு டாட்டா
எண்ணெய் பசையால் பிசுப்பிசுப்பான சருமம் பெற்றவர்களுக்கு முல்தானி மெட்டி ஒரு வரப்பிரசாதம்.
இது சருமத்தில் உள்ள தேவையில்லாத எண்ணெய்யை உறிஞ்சி பருக்களும், கட்டிகளும் வராமல் தடுக்கிறது.
இதனால் பொலிவிழந்து காணப்படும் சருமம் பளிச்சென்று மாறும்.
நிறம் மாறும்
முல்தானி மெட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் தோலில் உள்ள பழுப்பு நிறத்தை போக்கி, நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.
இது மட்டுமின்றி தோலில் அலர்ஜி மற்றும் சொறிகளால் ஏற்படக்கூடிய சிவப்பையும் குறைக்க முல்தானி மெட்டி உதவுகிறது.
வளவளப்பான தோலுக்கு
முல்தானி மெட்டி தோலில் உள்ள தடிப்புகளை குறைத்து, தோலை மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
இதனால் தோல் உறுதியாகவும், நல்ல நிறமாகவும் மாறுகிறது.
எனவே முல்தானிமட்டியை தொடர்ந்து உபயோகித்தால் ஆரோக்கியமான தோலுடன், சரியான உடல் கட்டமைப்பு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக