தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 ஜனவரி, 2015

இனி சார்ஜ் பிரச்சனை இல்லை.... !!


பொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ்ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானது. இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில் சார்ஜ் ஏற்ற முடியும். 2 நிமிடத்தில் முழுவதும் சார்ஜ் ஆகும் இந்த பேட்டரி மூலம், 5 மணி நேரம் பயன்பெற முடியும்.

எனினும் இந்த அதிநவீன பேட்டரி, சாதாரண பேட்டரிகளை விட குறைவான ஆயுளையே பெற்றுள்ளது. மேலும் இந்த பேட்டரிக்கு விலையும் அதிகம். அதன்படி இந்த பேட்டரியுடன் கூடிய செல்போனுக்கு, சாதாரண விலையை விட கூடுதலாக 50 டாலர் (சுமார் ரூ.3000) அதிகம் செலுத்த வேண்டும். தற்போது சந்தையில் விற்பனை செய்யக்கூடிய செல்போன்களில், இந்த பேட்டரியை இணைக்க வேண்டுமென்றால், சில மாற்றங்களை செய்ய வேண்டியது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக