தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 ஜனவரி, 2015

உடல் எடையை குறைக்கும் ஐஸ் ஜாக்கெட்: புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவை சேர்ந்த நாசா விஞ்ஞானி ஒருவர் உடல் எடையை குறைக்கும் ஐஸ் ஜாக்கெட்டை கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், நாசாவின் ஜெட் ப்ரபல்சன் ஆய்வகத்தில் வருகை விஞ்ஞானியாகவும் பணிபுரியும் வேன் ஹேஸ் என்பவர் புதிதாக ஐஸ் ஜாக்கெட் என்ற உடல் எடையை குறைக்கும் கருவியை உருவாக்கியுள்ளார்.
இந்த ஐஸ் ஜாக்கெட் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக இருக்கும். மிக எளிமையான கோட்பாட்டைக் கொண்டு இது இயங்குகிறது.
பார்ப்பதற்கு கோட்டிற்கு உள்ளே அணியும் சட்டை போல இருக்கும். இதற்குள் குளிர்ந்த நீர் இருக்கும். இதை சட்டையைப்போல உடலில் அணிந்து கொள்ளலாம்.
ஐஸ் ஜாக்கெட்டில் உள்ள குளிர்ந்த நீரால் உடல் வெப்ப நிலை குறைவதால் அதை சமநிலைப்படுத்த நம் உடல் தனக்குள் உள்ள கலோரிகளை எரித்து உடலின் வெப்ப நிலையை அதிகரிப்பதால் நம் உடல் எடை குறைகிறது.
இது குறித்து வேன் கூறுகையில், இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 கலோரி வரை எரிக்க முடியும் என்றும் வாரத்திற்கு 1 பவுண்டு வரை எடையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக