தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

கொள்ளையடிக்கும் அமேசான் பழங்குடியினர்: திணறும் மக்கள்!

அமேசான் காட்டில் உள்ள பழங்குடியினர் சமீப காலமாக அதிகளவில் கொள்ளையடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமேசான் காட்டில் உள்ள மாஷ்கோ பிரோ(Mashco Piro) என்ற பழங்குடியின மக்கள், உணவிற்காக அருகில் உள்ள பெரு நாட்டின் கிராமம் ஒன்றில் மக்களின் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் அவர்களது வீட்டிலிருந்து பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவையும் கொள்ளையடித்து வீடுகளை தரைமட்டமாக்கியுள்ளன.
இதுவரை இதுபோல் 200 பழங்குடியினர் கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்களது அட்டகாசம் தாங்கமுடியாமல் கிராமத்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கிராமத்து மக்களை அப்புறப்படுத்தி வேறொரு பாதுகாப்பான இடத்தில் வைக்க, பெரு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக