தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, December 24, 2014

தூக்கம் மற்றும் உடல் நலத்தை பாதிக்கும் இலத்திரனியல் புத்தகங்கள்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக சாதாரண புத்தகங்களுக்கு பதிலாக E-book எனப்படும் இலத்திரனியல் புத்தகங்கள் அறிமுகமாகியுள்ளன.
பல வழிகளில் நன்மைகளைத் தரும் இந்த E-book வாசிப்பு உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என அமெரிக்க வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது Harvard Medical School ஐ சேர்ந்த வைத்தியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சாதாரண புத்தகங்களை வாசிப்பதை விடவும் வெளிச்சத்தினை வெளியிடக்கூடிய இலத்திரனியல் புத்தகங்களை தூங்கும் முன்பு வாசிப்பதால் தூக்கமும், உடல் ஆரோக்கியமும் கெடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதென கண்டறிந்துள்ளனர்.
மேலும் மனித உடல் ஒரு சந்தத்திற்கு ஏற்ப தொழிற்படுவதாகவும், ஆனால் ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லட் மற்றும் LED தொழில்நுட்ப உபகரணங்களிலில் இருந்து வெளியேறும் நீல நிற அலை இச் சந்தத்தினை குழப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment