தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, November 26, 2014

உங்களுக்கு தெரியாத தலைவர், அப்படி என்ன ?

உங்களுக்கு தெரியாத தலைவர், அப்படி என்ன ? என்று நினைக்கவேண்டாம்... முதலில் தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
தலைவர் பற்றி அரிய சில குறிப்புகள் இதோ..
பிறந்த தேதி: 26.11.1954 முன்னிரவு 7 மணி 18 நிமிடம்.
2 சகோதரிகள், மற்றும் 1 சகோதரர். (சகோதரர் டென்மார்கில், சகோதரிகளில் ஒருவர் இந்தியா மற்றையவர் கனடா)
சிறுவதில் விளையாடுவது: வாலி-போல் ,
சிறுவதில் பிடித்த உணவு: பிட்டு , தேங்காய் சம்பல், இரால் வறுவல்.
வளர்ந்த நிலையில் அவரைக் கவர்ந்தவர்கள்: சுபாஷ் சந்திரபோஸ், கரிகால மன்னன், திருப்பூர் குமரன், வாஞ்சிநாத ஐயர், மேலும் பலர்..
பிடித்த நூல்: பகவத்கீதை, பொன்னியின் செல்வன் போன்ற நூல்கள்
பிடித்த ஆங்கில நடிகர்: கிளீன் -டிஸ்-வூட்
பொழுதுபோக்கில் பிடித்தவை: புத்தகம் வாசித்தல், சமைத்தல்,
வளர்ந்த நிலையில் அவரைக் கவர்ந்த உணவுகள்: சீன உணவுகள், உடும்பு இறைச்சி, ரால் வறுவல்,
மனதை பாதித்த விடையம்: 4 வயதாக இருக்கும்போது(1958ல்) நடந்த இனக் கலவரம்
இளவயதில் அவரைக் வெகுவாகக் கவர்ர்ந்த அரசியல்வாதி, திரு. நவரட்ணம் மற்றும் வேணுகோபால் மாஸ்டர்
இளவயதில் இணைந்த அமைப்பு: "தமிழ் மாணவர் பேரவை", மற்றும் தமிழ் இளைஞர் பேரவை
பிரபாகரனுக்கு முதல் முதலாக துப்பாக்கி விற்ற நபர் பெயர்: சம்பந்தன்(பருத்தித்துறையில் வசித்து வந்தவர்)
கைத்துப்பாக்கியின் விலை: 150 ரூபா: தனது மோதிரத்தை விற்று பிரபாகரன் அந்த கை துப்பாக்கியை வாங்கினார்.
1983 செப்டெம்பர் மாதம் யாழ் பல்கலைக் கழகத்தில் மதிவதனி உட்பட 5 பேர் உண்ணாவிரம் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சோர்வடைந்து இறக்கும் தறுவாயில் இருந்ததால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு சென்றார் பிரபாகரன். அங்கே அவர்கள் சென்னையில் இந்திரா நகரில் உள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீட்டில் 5 வரும் தங்கி இருந்தார்கள். பிரபாகரன் ஒரு போராளி அவர் ஒரு இயக்கத்தை கொண்டு நடத்துகிறார் என்று மக்களால் அறியப்பட்டவர். அவரை பார்த்தாலே பலருக்கு பயமாக இருக்கும். ஆனால் நான் அவர் மேல் மஞ்சல் தண்ணீரை ஊற்றுவேன் ... எனக்கு அவர்மேல் பயம் கிடையாது என்று தோழிகளிடம் சவால் விட்டவர் வேறு யாரும் அல்ல மதிவதனி தான். இந்தியாவில் கொண்டாடப்படும் ஹொலிப் பண்டிகை தினத்தில், பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு வரவே, சற்றும் பயப்பிடாமல் மஞ்சல் தண்ணீரை எடுத்து பிரபாகரன் மேல் ஊற்றிவிட்டார் மதிவதனி. இதனால் சடுதியாக கோபம் அடைந்த பிரபாகரன் அவரை கடிந்து தள்ளினார்.
அழுதுகொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்த மதிவதனி அவ்விடத்தை விட்டு எழுந்துகொள்ளவே இல்லை. நீண்டநேரம் அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு பேசிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்ட தயாரான பிரபாகரன், அங்கே ஒரு முலையில் மதிவதனி உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பதை கவனித்தார். கிட்டச் சென்று அழவேன்டாம் என்று ஆறுதல் கூறினார். அன்றில் இருந்துதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது. பின்னர் ஒரு நாள் அவர் பூ வாங்கிக்கொண்டு சென்று அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்றவேளை, அவர்கள் காதலை ஆதரித்து, ஆதரவு கொடுத்தது அன்ரன் பாலசிங்கம் தான். 1984ல் இவர்கள் இருவரும் திருமணம் முடித்தார்கள். தலைவரின் சந்தோஷமான நிமிடங்களில், இக்கட்டான காலகட்டங்களில், எல்லாம் அவரோடு துணையாக இருந்தது மதிவதனி அக்கா என்றால் அது மிகையாகாது. இன்றைய நாளில் தலைவர் பிரபாகரன் அவர்களின் சில இனிமையான நினைவுகளை நாமும் நினைத்துப் பார்பதில் பெருமைப்படுகிறோம்...
அதிர்வு இணையத்திற்காக:
கண்ணன்.

http://www.athirvu.com/newsdetail/1519.html

No comments:

Post a Comment