தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 நவம்பர், 2014

இந்த உணவுகளை சாப்பிடுங்க! வயிற்று பிரச்னைக்கு குட்பை சொல்லுங்க!

உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று வயிறு, இதில் ஏதேனும் பிரச்னை என்றால் பெரும் பாடுதான்.
சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு நம் வயிற்றை பாதுகாக்காவிட்டால், அது பிற்காலத்தில் நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்புண்டு.
மேலும் உணவு கட்டுபாட்டின்றி எல்லையற்று துரித உணவுகளை உட்கொள்வதும் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்ககூடும்.
இப்போது வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும் சில சத்தான உணவுகளை பார்ப்போம்.
தயிர்
நம் வயிற்றில் உள்ள பல கோடிக்கணக்கான பக்டீரியாக்கள் தான் நாம் சாப்பிடும் உணவைச் சரியான முறையில் செரிக்க வைக்கின்றன.
தயிரில் சத்துள்ள பக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதால், இது வயிற்றுக்கு மிகவும் நல்லது.
வாழைப்பழம்
வயிற்றுக்குள் செல்லும் பல செரிக்காத உணவு வகைகளை, வாழைப்பழம் நன்றாகச் செரிக்கச் செய்வதால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் சீக்கரமாக உணவு ஜீரணமடைய உதவுவதில் வாழைப்பழம் பெரும் பங்கு வகிக்கின்றது.
எலுமிச்சை
நீரில் எளிதில் கரையக்கூடிய அமிலங்கள் எலுமிச்சையில் இருப்பதால், அது வயிற்றுக்கும் செரிமானத்துக்கும் மிகவும் உதவுகிறது.
இஞ்சி
இஞ்சியை அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பல வயிற்று உபாதைகளை நீக்குவதில் இஞ்சியை ஒரு சிறந்த மருந்து என்றே கூறலாம்.
கீரை
பெரும்பாலும் அனைத்து வகையான கீரை வகைகளுமே வயிற்றுக்கு நல்லது.
தினமும் ஒரு வகைக் கீரையைச் உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனையே வராது.
கோதுமை
கோதுமை வகை தானியங்களில் நார்ச்சத்து, மாங்கனீஸ், செலினியம் ஆகியவை உள்ளன.
இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும், இவற்றில் உள்ள சத்துக்கள் செரிமானத்திற்கு நல்லவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக