தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 அக்டோபர், 2014

பால் குடித்தால் உயிருக்கு ஆபத்து! ஆய்வில் திடுக்கிடும் தகவல்

பால் குடிப்பது உடம்புக்கு நல்லது என கூறிவரும் நிலையில், உயிருக்கே ஆபத்து ஏற்படும் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.சுவீடனில் உள்ள உப்சலா பல்கலைகழக பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான குழுவினரே, ஆய்வு மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து கார்ல் மைக்கேல்சன் கூறுகையில், பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம்.
61 ஆயிரம் பெண்கள், 45 ஆயிரம் ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில், தினமும் இரண்டு டம்ளருக்கும் அதிகமாக, அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்பவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சீக்கிரமே உயிரிழப்பது தெரியவந்தது.
பாலில் கலந்திருக்கும் 'லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்' என்ற பொருட்கள் (சர்க்கரை தன்மை) காரணமாக, பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
குறைவாக பால் குடிப்பவர்களை விட அதிகமாக பால் குடிப்பவர்கள் விரைவாக உயிரிழப்பதையும் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக