தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

வியப்பில் ஆழ்த்தும் சர்க்கஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)

பொழுதுபோக்குக்காக மரத்தின் வடிவங்களை கற்பனைக்கு எட்டாத அளவில் மாற்றி விவசாயி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஸ்வீடனில் பிறந்த ஆக்ஸெல் எர்லாண்ட்சன் என்ற விவசாயி, 1945ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு சிறிய இடத்தை விலைக்கு வாங்கி அங்கே இந்த வித்தியாசமான தோற்றத்திலான மரங்களை வடிவமைத்துள்ளார்.
அந்த தோட்டத்தில் நாற்காலி வடிவிலான மரம், கூடை போன்ற மரம், வளைவு நெளிவுகளுடன் கூடிய மரம், ஏணிப் படிகள் மற்றும் இதய வடிவில் என எண்ணற்ற வகைகளில் மரங்களை தன் கற்பனைக்கு ஏற்றவாறு வடிமைத்துள்ளார்.
இயற்கையாய் வளரும் மரங்களை கட்டுபடுத்துவது என்பது சுலபமான காரியம் அல்ல. ஆனால் இவர் தனது திறமையால் பல மரங்களை ஒன்றிணைத்து வளைத்து பல அரிய வடிவங்களில் உருவாக்கியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகிறது.
சர்க்கஸ் மரங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மரங்களை எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் மாற்றுகிறார் என்பதை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 1964ம் ஆண்டு ஆக்ஸெல் இறந்த பிறகு அவரோடு சேர்ந்த அந்த அறிய கலையும் சென்றுவிட்டது. பலரும் மரங்களின் வடிவங்களை மாற்ற முயற்சித்தும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.
1985ம் ஆண்டு மைக்கேல் போன்ஃபாண்டே என்ற பணக்காரர் இங்கிருந்த மரங்களில் 24-ஐ இடமாற்றம் செய்து தனது புதிய கேளிக்கை பூங்காவில் வளர்த்து வருகிறார்.
மேலும், பல ஆண்டுகளாக மக்கள் இதனை பார்த்து ரசித்து வந்தாலும் இதன் வடிவங்களுக்கான காரணம் மட்டும் இன்றளவும் ரகசியமாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக