தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 அக்டோபர், 2014

காதல் தோல்வியா? கவலைப்படாமல் இருக்க இத படிங்க!


வாழ்வில் பல விடயங்களில் வெற்றி வாகை சூடி வந்த எத்தனையோ பேர் கூட, காதல் தோல்வி எனும் கசப்பான அனுபவத்தை கடந்து வந்திருக்கலாம்.
ஆனால் அதை அவர்கள் வெளியுலகத்திற்கு காட்டி கொள்வதில்லை, காரணம் உலகம் நம்மை ஏளனம் பேசி சிரிக்குமே என்பது தான்.
காதலில் தோல்வியடைய பெரிய காரணங்கள் ஏதும் இல்லை, ஒன்று நாம் தேர்தெடுத்த நபர் நம்மை ஏமாற்றி இருக்க வேண்டும் அல்லது நமக்கு அந்நபருடன் ஒத்துபோக முடியாமல் கருத்து வேறுபாடினால் பிரிந்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு காரணங்களை கொண்ட பெரும்பாலான இளம் ஜோடிகள் தங்களது காதலை முறித்து கொள்கின்றனர்.
இந்த காதல் தோல்வியிலிருந்து விடுபட்டு வாழ சில வழிமுறைகளை கையாண்டாலே நம் வாழ்க்கை சிறக்கும்.
இதயம் செல்ல கேளுங்க
உங்கள் இதயம் கூறுவதை கேளுங்கள், உங்கள் இதயம் உங்களுக்கு சிறந்த உறவு அறிவுரையை வழங்கும்.
மனம் நொந்திருக்கும் வேளையில் பிறரை ஆலோசிப்பதை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அது குழப்பத்திலேயே முடியும்.
நல்லா யோசிங்க
நீங்கள் விரும்பியவர் உங்களுடன் இல்லாதது உங்களுக்கு வருத்தமாக தான் இருக்கும்.
ஆனால் இந்த சூழ்நிலையுடன் நீங்கள் ஒத்துப் போக வேண்டும், இது போன்ற நேரங்களிலே நன்கு யோசித்து முடிவில் நாம் திடமாக இருக்க வேண்டும்.
எழுதுங்கள்
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அவைகளை எழுதுவதும் ஒரு வழியாகும். எண்ணங்கள் மூளையில் இருக்கும் வரையில் அது உங்களுக்கு தொந்தரவாகவே இருக்கும்.
உங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க தொடங்கும், அதனால் ஒரு தாளில் அனைத்தையும் எழுதி உங்கள் பாரத்தை குறையுங்கள். இதனால் அனைத்தையும் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கவும் முடியும்.
நண்பர்களோடு பேசுங்கள்
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கு பதிலாக, வெளியே சென்று நண்பர்களை சந்தியுங்கள். ஏனெனில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது உங்களின் மனதில் பழைய நினைவுகளை அலைபாய தொடங்கும்.
இதனால் நிலைமை இன்னும் மோசமடைய தான் செய்யும். அதனால் நண்பர்களிடம் பேசுங்கள், நேரத்தை அவர்களுடன் செலவழித்து கவனத்தை திசை திருப்புங்கள்.
பயணம் செய்யுங்கள்
உறவில் ஏற்பட்டுள்ள முறிவை கையாள ஒரு சிறந்த வழி, பயணிப்பது. உங்களுக்கு பிடித்த இடத்தை தெரிவு செய்யுங்கள். அது உங்கள் பழைய துணையுடன் நீங்கள் சென்ற இடமாக இருக்க வேண்டாம்.
புதிய இடம், புதிய ஆட்கள் ஆகியவற்றை எடுத்து கொண்டு பயணித்து, வித்தியாசமான அனுபவத்தை பெற்றிடுங்கள்.
மீண்டும் குழியில் விழாதீர்கள்
உங்கள் "உறவு முறிவு" என்பது இறுதியான முடிவாகும். அதனால் உங்கள் துணையை மீண்டும் சமாதானம் செய்ய போகிறீர்கள் என்ற பெயரில், எடுத்த முடிவில் இருந்து பின் வாங்காதீர்கள்.
உங்கள் இருவருக்கு இடையே எல்லாம் சுமூகமாக போக வேண்டுமானால், அது தானாகவே சிறிது காலத்தில் நடைபெறும்.
ஆனால் நீங்கள் வலிய எடுக்கும் முயற்சி நிலைமையை இன்னும் மோசமடைய தான் செய்யும். அதனால் உங்கள் முடிவில் நிலையுடன் இருங்கள், காலம் அனைத்திற்கும் பதிலை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக