தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, October 24, 2014

மழைக்கால நோய்களை அடித்து விரட்ட சூப்பர் டிப்ஸ்!

தற்போது மாறி வரும் பருவ நிலையால் பலவித நோய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
இந்த காலங்களில் சளி, வயிற்றுபோக்கு, மற்றும் சரும அலர்ஜி போன்ற பிரச்சனைகள் நம்மை எளிதில் தொற்றிக் கொள்ளும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் குளிர்ந்த காற்றில் பரவும் என்பதால் அவை சளி, இருமல், போன்ற பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளன.
தண்ணீரை சூடு செய்து குடியுங்கள்
தொண்டையை குறி வைக்கும் இந்த கிருமிகள் மெல்ல உடலில் ஊடுருவிச் சென்று கண் மற்றும் மூக்கை சுற்றியுள்ள காற்று பைகளை தாக்குவதால் மூக்கடைப்பு, மூக்கொழுதல், தொண்டை வலி, போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
குளிர் காலத்தில் வெளியே செல்லும் போது காது மற்றும் மூக்கை மறைத்து செல்ல வேண்டும். எல்லா காலத்திலும் தண்ணீரை சூடு செய்து குடிக்க வேண்டும். காரணம் தண்ணீர் பாக்டீரியா கிருமிகளின் வாழ்விடமாக உள்ளது
செரிமானமாகும் உணவுகளை உண்ணுங்கள்
வயிற்றுபோக்குக்கு மற்றொரு காரணம், அஜீரண கோளாறு, குளிர்காலத்தில் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாது.
எனவே அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் எண்ணெய் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். வேகவைத்த காய்கறிகள், பழங்கள் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடவேண்டும்.
சுடு தண்ணீரில் குளியல்
மழைக்காலத்தில் சருமத்தை தாக்கும் மற்றொரு நோய், சொரி, படை, சிரங்கு. வெயிலின் தாக்கத்தால் பூமியின் தட்பவெட்பம் அதிகமாக இருக்கும். தீடீரென்று மழை பெய்யும் போது அது பூமிக்கு அடியில் சூட்டை மேலே கிளப்பி விடும்.
அந்த சமயத்தில் மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்கு சருமத்தில் சொரி, சிரங்கு, சூட்டுக்கொப்பளங்கள், போன்ற நோய்களின் பாதிப்பு ஏற்படும்.
மேலும் குளிர் காலத்தில் வியர்வை வெளியேறாது. அதனால் சருமத்தில் உள்ள துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்கேபிஸ் என்ற சரும நோய் ஏற்படலாம். எனவே தினமும் இரண்டு வேளை சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.
சத்தான பருப்பு வகைகளை சாப்பிடுங்கள்
வேகவைத்த சுண்டல் பயிறு வகைகள், காய்கறி சாலட், பழங்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
பழங்களை உண்ணாதீர்கள்
பொதுவாக மழைக் காலங்களில் திராட்சை, ஆரஞ்சு, மற்றும் கொய்யா போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. வைட்டமின் சி, இரும்புச்சத்து, மற்றும் இதர ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment