தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 அக்டோபர், 2014

வரையறையற்ற ஒன்லைன் சேமிப்பு வசதிக்கு விடை கொடுக்கும் Bitcasa!

கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியை வழங்கிவரும் நிறுவனங்களில் ஒன்றான Bitcasa தனது வாடிக்கையாளர்களுக்கு வரையறையற்ற சேமிப்பு வசதியினை வழங்கிவந்தது.
எனினும் தற்போது இதனை நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறு நிறுத்தப்படுவதற்கு முறைகேடுகளே காரணம் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், புதிய சில பக்கேஜ்களை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி 1TB தொடக்கம் 10TB வரையான சேமிப்பு வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
1TB சேமிப்பு வசதியினை பெற்றுக்கொள்வதற்கு மாதாந்தம் 9.99 டொலர்களும் அல்லது வருடாந்தம் 99 டொலர்களும் செலுத்த வேண்டும் என்பதுடன், 10TB சேமிப்பு வசதியினைப் பெறுவதற்கு வருடாந்தம் 999 டொலர்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய நிறுவனங்கள் வழங்கும் ஒன்லைன் சேமிப்பு வசதி பற்றிய விபரங்கள்
Apple iCloud
– 5 GB for free
– 20 GB for $0.99 per month
– 200 GB for $3.99 per month
– 1 TB for 20.00 per month (240.00 per year)
Google Drive
– 15 GB for free
– 100 GB for $1.99 per month
– 1 TB for $9.99 per month
Dropbox
– 1 TB for 9.99 Per Month
– 1 TB for 99.00 per Year
MediaFire
– 15 GB for free (up to 50 gigs with referrals)
– 1 TB for $2.50 Per Month
– 1 TB for $24.99 Per year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக