தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஆகஸ்ட், 2014

காவல்துறை குவிப்பு மத்தியில்! பல்லாயிரம் பக்தா்களுடன் சப்பறத்தில் நல்லுா்க் கந்தன்

நல்லார்க்கந்தன் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா தினங்களில் ஐந்நூறிற்கும் அதிகமான காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக யாழ். மாவட்டப் பிரதி காவல்துறை அதிபர் றொகான் டயஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

நல்லூர்க் கந்தன் ஆலய வருடதந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்று வருகின்றது. இதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்து புலம்பெயர்ந்திருக்கின்ற பலரும் என பெருமளவான அடியவர்கள் நாளாந்தம் வருகை தருகின்றனர்.
இதனால் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியக்களைத் தவிர்க்கும் பொருட்டும் பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொருட்டும் ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு அமைய இலங்கை காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நாளையதினம் இடம்பெறவுள்ள தேர்த்திருவிழாவிற்கும் நாளை மறுதினம் இடம்பெறும் தீர்த்தத்திருவிழாவிற்கும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமையவே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இதன் போது சீருடையுடனும் சிவில் உடையிலும் அதிகளவான காவல்துறையினர் மக்களுடன் மக்களாக கடமையாற்றப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.Nallur_Temple_Police


நல்லுாா்க் கந்தனின் சப்பறத் திருவிழைா இன்றாகும். பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் இன்று மாலை நல்லுாக் கந்தனின் சப்பறத் திருவிழாவைக் கண்டு  அருள் பெறுவதற்காக அங்கு கூடியிருந்து வழிபட்டனா். காவடி, கரகம், தீப்பந்தம் போன்றவற்றுடன் கந்தன் வெளிவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் புரிந்தான்.

Nalur-SapparamNalur-Sapparam-01Nalur-Sapparam-02Nalur-Sapparam-03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக