தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

சண்டே ஸ்பெஷல்- மட்டன் பெப்பர் ஃப்ரை


பெரும்பாலான நபர்களுக்கு சிக்கனை விட மட்டன் ரொம்ப பிடிக்கும், அதுவும் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமா சாப்பிடணும் என்றால் சொல்லவா வேண்டும்.
இதோ ஆந்திரா ஸ்டைல் மட்டன் பெப்பர் ஃப்ரை ரெசிபி செய்முறை விளக்கத்துடன்
தேவையான பொருட்கள்
மட்டன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2-4
செய்முறை
முதலில் சுத்தமான நீரில் மட்டனை கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்பு மட்டனை குக்கரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
இதற்குள் அரைக்கு கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்பு மிளகாய் தூய், அரைத்து வைத்துள்ள பொடி சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும், வேகவைத்துள்ள மட்டனை அப்படியே தண்ணீருடன் சேர்த்து, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.
கடைசியாக மிளகுப் பொடி தூவி, கொத்தமல்லியை தூவினால் சுவையான மட்டன் பெப்பர் ப்ரை ரெடி!!!
தேவையானவர்கள் கடைசியில் தேங்காய் பாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக