தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, August 26, 2014

அனுமன் கொண்டுவந்த “சஞ்சீவனி மூலிகை”- இமயமலையில் கண்டுபிடிப்பு !

இமயமலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூலிகை ஒன்று ராமாயணத்தில் அனுமன் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இமய மலையில் வாழ்வதற்கே கடினமான பகுதிகளில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற அதிசய மூலிகை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
லடாக்கில் சோலோ என்றழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே இருந்தாலும், லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில் இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
விஞ்ஞானிகள் இதுபற்றி கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது, கதிரியக்கத்தின் விளைவுகளிலிருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது
மேலும் மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும் ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment