தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்-விநாயகா உன் தினத்தில் தமிழ்க்கொலை!-சிறப்பு சிற்றூண்டிகள் என்றால் ஆங்கிலம் அழிந்திடுமோ!!


விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவரது வீடுகளும் அலங்காரத்தில் ஜொலிக்கும்.
வீட்டை சுத்தம் செய்து, விநாயகருக்கு வேண்டிய படையல்களை தயார் செய்து அவரை அன்பாக வீட்டிற்கு வரவேற்பார்கள்.
இதோ அவரை வரவேற்பதற்கான உணவுகள்,
வெல்லம், பருப்பு மோதகம்
வெல்லம், பருப்பு ஆகியவற்றைக் கொண்டு மோதகம் செய்து விநாயகருக்கு படைக்கலாம். ஏனெனில் இது விநாயகருக்கு பிடித்த ரெசிபிக்களில் ஒன்று.
பால் கொழுக்கட்டை
விநாயகருக்கு படையல் என்று வரும் போது முதலில் நினைவில் வருவது கொழுக்கட்டை தான். அதிலும் பால் கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படைப்பது மிகவும் சிறந்தது.
கருப்பு சுண்டல் ரெசிபி
கருப்பு சுண்டல் ரெசிபி இல்லாவிட்டால் கருப்பு சுண்டலை வேக வைத்து, தாளித்தும் விநாயகருக்கு படைக்கலாம்.
மோத்தி சூர் லட்டு
விநாயகருக்கு பிடித்த மற்றொரு ரெசிபி லட்டு. எனவே விநாயகர் சதுர்த்திக்கு மோத்தி சூர் லட்டு செய்து விநாயகருக்கு படையுங்கள்.
வறுத்த தேங்காய் வெல்ல மோதகம்
மோதகம் என்பது கொழுக்கட்டை போன்றது. பொதுவாக மோதகமானது இட்லி பாத்திரத்தில் வேக வைத்து செய்யப்படும். ஆனால் இந்த மோதகமானது எண்ணெயில் பொரிப்பதாகும்.
வேர்க்கடலை சுண்டல்
விநாயகருக்கு கருப்பு சுண்டல் மட்டுமின்றி, வேர்க்கடலை கொண்டும் சுண்டல் செய்து படைக்கலாம். இங்கு அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
பாதாம் லட்டு
விருப்பமுள்ளவர்கள் பாதாம் லட்டு செய்து இந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு படைக்கலாம்.
தேங்காய் லட்டு
இன்னும் வித்தியாசமாக லட்டு செய்ய நினைத்தால், தேங்காய் லட்டு செய்து படையுங்கள்.
ஸ்வீட் கார்ன் சுண்டல்
எப்போதும் சுண்டல், வேர்க்கடலை கொண்டு சுண்டல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்து படையுங்கள்.
எள்ளு வெல்ல லட்டு
விநாயகருக்கு எள் என்றாலும் மிகவும் பிடிக்கும். எனவே எள்ளு கொண்டு அருமையாக லட்டு செய்தும் படைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக