தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, August 24, 2014

சீக்கிரம் சோர்வடைய என்ன காரணம்?

சில நபர்கள் வெகு சீக்கிரமாகவே சோர்வடைந்து விடுவர், இதற்கு என்ன காரணமாக இருக்கும்?
அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.
தூக்கமின்மை
குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். சரிவர தூங்காமல் இருந்தால் சோர்வு தொற்றிக் கொள்ளும்.
உணவில் கவனம் தேவை
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க போதுமான அளவு ஆரோக்கியமான உணவானது உடலுக்கு தேவைப்படுகிறது.
காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகப்படியான அசைவ உணவு போன்றவையும் சீக்கிரம் சோர்வடைவதற்கு காரணமாக இருக்கலாம்.
ரத்த சோகை
பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் உடலில் சத்துக்கள் குறைவாக இருத்தல். இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.
தேநீர்
கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.
நீரிழிவு நோய்
35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.
உடலில் நீர், உப்பு பற்றாகுறை
போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு போன்றவையும் ஒரு காரணம் தான். எனவே அதிகளவில் தண்ணீர் பருகுவது அவசியம்.

No comments:

Post a Comment