தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஜூலை, 2014

இனிது வாழ்தல் இனிது!


மனிதனாக ஜென்மம் எடுத்த நாம், இருக்கின்ற காலத்தில் நல்ல பழக்கவழக்கங்களோடு வாழ்க்கையை கழிக்க வேண்டும்.
வறுமை, போட்டி, பொறாமைகள், வஞ்சம் என அனைத்தால் சூழப்பட்ட இந்த வாழ்க்கையை நல்ல நல்லொழுக்கத்தோடு வாழ வேண்டும்.
வாழ்வில் உறவுகளில் ஏற்படும் விரிசல்களில், கணவன்- மனைவிக்குள் ஏற்படும் விரிசல்கள் தான் அதிகம்.
அந்த விரிசல்கள் ஏற்படுவதற்கு விட்டுக்கொடுக்காமையே காரணம், முதலில் உங்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
எப்போதோ செய்த தவறுகளை, துரோகங்களை நினைத்து, காலத்துக்கும் அது குறித்த குற்ற உணர்வில் புழுங்குவார்கள் சிலர். ‘எனக்கு மன்னிப்பே கிடையாது’ என அந்த நினைவை எப்போதும் பசுமையாகவே வைத்திருப்பார்கள். இது தவறு.
உங்கள் மீது உங்களுக்குக் கருணை வேண்டும்
* உங்கள் துணை உங்களுக்குப் பிடிக்காத முறையில், வித்தியாசமாக நடந்து கொள்கிறாரா? முதலில் அதற்கான காரணத்தைப் பாருங்கள். அதுதான் அவரது ஆளுமையா? அல்லது அவரது வளர்ப்பு முறையே அப்படித்தானா? அல்லது அவரது கலாசாரத்தின் பாதிப்பா எனப் பாருங்கள்.
* இந்தப் பிரச்னை உங்களைப் போலவே உங்கள் தோழிகள் அல்லது நண்பர்கள் சிலருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படி சிலரை சேர்த்துக் கொண்டு ஒரு குழுவாகவே இதற்கான பயிற்சியை முயற்சி செய்யலாம். அந்தப் பயிற்சியில் நீங்கள் கவனிக்க வேண்டியவை.
உங்கள் துணையிடம் நீங்கள் என்ன மாதிரியான பிரச்னைகளைப் பார்க்கிறீர்கள்?
* உங்கள் துணையின் வளர்ப்பு முறை எப்படியிருந்தது? அவரது அம்மாவின் இயல்பு கள், நம்பிக்கைகள், அப்பாவின் இயல்புகள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவை எப்படிப் பட்டவை?
* ஒரு பிரச்னையை அல்லது விஷயத்தை அணுகுவதில் உங்கள் துணையின் கடந்த கால அனுபவம் எப்படியிருந்தது? உதாரணத்துக்கு 100 ரூபாயை தொலைத்துவிட்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்திருக்கலாம் அல்லது லட்ச ரூபாயை பறி கொடுத்த பிறகும் பதற்றமே இல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருக்கலாம். உங்கள் துணை எந்த ரகம்?
* உங்கள் துணையின் ஆளுமை எப்படிப்பட்டது? எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுபவரா? டேக் இட் ஈஸி பாலிசி உள்ளவரா? சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நொறுங்கிப் போகிறவரா? சட்டென கோபப்படுபவரா? பழமைவாதியா? மிஸ் அல்லது மிஸ்டர் பர்ஃபெக்ஷனிஸ்ட்டா? நெகட்டிவ் சிந்தனை அதிகமுள்ளவரா? எதையும் திட்டமிட்டுச் செய்பவரா?
* இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து, பிறகு ஒரு முடிவுக்கு வரலாம். நான்கைந்து நபர்களுடன் சேர்ந்து இந்தப் பயிற்சியைப் பழகும் போது, வேறு வேறு பார்வைகள், வேறு வேறு அணுகு முறைகளைப் பற்றிய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும்.
* இறுதியில் உங்கள் துணையிடம் நீங்கள் கண்டெடுத்த நெகட்டிவ் விஷயங்கள், பலவீனங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவரது கனவுகளை, லட்சியங்களை அறிந்து கொண்டு, அவை நிறைவேற உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக