தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 ஜூலை, 2014

விதையில்லா மாம்பழத்தை உருவாக்கிய இந்தியாவின் வேளாண் விஞ்ஞானிகள்!!


விதையில்லா மாம்பழத்தை உருவாக்கி இந்தியாவின் வேளாண் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
பிஹார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிஹார் வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த மாம்பழம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பல்கலைகழகத்தின் தலைவர் வி.பி.படேல் கூறியதாவது, ரத்னா மற்றும் அல்போன்ஸா மாம்பழ ரகங்களின் கலப்புகளில் இருந்து இந்த விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளோம்.
"சிந்து" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விதையில்லா மாம்பழ ரகம் நாட்டின் பல்வேறு இடங்களில் பரிசோதனை முயற்சியாக பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த மாம்பழத்தின் சராசரி எடை 200 கிராமாகவும், இதனுடைய கூழ் மஞ்சள் நிறத்திலும் மற்ற மாம்பழங்களைக் காட்டிலும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும்.
இதன் ரகம் முதன்முதலாக மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள கொங்கன் கிரிஷி வித்யாபீட ஆய்வு நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகள் நல்ல விளைச்சலை கொடுத்ததால் இந்த மாம்பழம் நமது ஊரின் வெப்ப நிலையை ஒத்துப் போகிறது என கூறியுள்ளார்.
மேலும் இந்த மாம்பழம் நல்ல வளர்ச்சி அடைந்தவுடன் இயற்கையான மாம்பழத்தைப் போலவே நிறம், மணம் மற்றும் சுவையைக் கொண்டிருக்கும் என்றும் இந்த ரகம் வரும் 2015ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எல்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக