தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஜூலை, 2014

ஞாயிற்றின் சிறப்பு உணவு!-சண்டே ஸ்பெஷல் ரெசிபி- கோபி மஞ்சூரியன்!


பொதுவாக எல்லாருக்கும் பிடித்த, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகளில் ஒன்று தான் காலிபிளவர்.
இதுல பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அதுல மிகவும் சுவையானது கோபி மஞ்சூரியன்.
தேவையான பொருட்கள்
காலிபிளவர்– 1 நடுத்தரமானது
மைதா– 2 மேசைக்கரண்டி
கார்ன் மாவு- 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு– 1/2 மேசைக்கரண்டி(விருப்பமெனில்)
இஞ்சி, பூண்டு விழுது– 1 மேசைக்கரண்டி
வெது வெதுப்பான தண்ணீர்– 1 /2 கப்பிறகும் குறைவாக
உப்பு– தேவையான அளவு
செய்முறை
காலிபிளவரை சிறு பூக்களாக பிரித்தெடுத்து உப்பு சேர்த்த கொதிக்கும் நீரில் 10 – 12 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
இன்னொரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, கார்ன் மாவு, உப்பு, இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
காலிபிளவரை தண்ணீரில் இருந்து வடித்து வைத்துக் கொள்ளவும். பின் ஒவ்வொரு பூவையும் பிசைந்து வைத்துள்ள மாவில் நன்கு தோய்த்து எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
எண்ணையை மிதமான சூட்டில் வைத்து கோபி வெந்ததும் எடுத்து விடவும்.
கோபி வெந்ததும் அடுப்பின் சூட்டை அதிகப்படுத்தி பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
பொரித்தெடுத்த பின் சோயா சாஸ், சில்லி சாசுடன் பரிமாறலாம்.
ஆங்கிலம் தெரியாதவனை தாழ்ந்தவனாகப்பார்க்கும் தமிழா ஐரோப்பாவிலும் அதனால் அடிமைப்படுத்தப்பட்ட  அமரிக்க,ஆசிய,ஆபிரிக்க நாடுகளிலும் தாய் மொழி தெரியாதவனை தவறாக பிறந்தவனாக பார்க்கையில் நம்  பழம் பெருமை கொண்ட தமிழன் மட்டும் தமிழை அறியாது இருப்பதை உயர்வாக கருதுகிறான்!தமிழ் பேச வெட்கப்படுகிறான்!ஆங்கிலம் தெரியாதவனை வாழத் தகுதி இல்லாதவர் போல பேசுகின்றார்!அப்படியானால் யப்பான்,ஜெர்மனி,பிரான்ஸ்,ஸ்பெயின்,போர்த்துக்கல் போன்ற நாடுகள் ஆங்கிலத்திலா செயலாற்றுகின்றன!?சீனா.ரஷ்யா..போன்ற நாடுகள் ஆங்கிலம் பேசியதாலா வல்லரசுகள் ஆயின!மானங்கெட்ட, ஈனமான ஒரே ஒரு இனம் தமிழ் இனமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக