தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, July 28, 2014

சிறுநீரகக்கல் பிரச்சனையா? இதோ வாழைத்தண்டு மோர்க்கூட்டு!

சிறுநீரகத்தில் கல் வராமல் இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறையாவது வாழைத்தண்டை உணவில் சேர்த்து வர வேண்டும்.
ஏனெனில் வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை சிறுநீரக கல் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் சிறுநீரக கல் இருப்பவர்கள், தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடித்தால், சிறுநீரகக் கல் கரைந்துவிடும்.
ஆனால் சிறுநீரக கல் வராமல் இருக்க வேண்டுமானால், வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.
இதோ வாழைத்தண்டு மோர்க்கூட்டு,
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1 துண்டு
தயிர் - 1 கப்
ப.மிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்
தனியா - அரை ஸ்பூன்
வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப்
இஞ்சி சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு, எண்ணெய் - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
• இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.
• வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை நீக்கி வைக்கவும்.
• தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.
• சுத்தம் செய்த வாழைத்தண்டை மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்.
• ப.மிளகாய், தனியா, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த வாழைத்தண்டுடன் சேர்க்கவும்.
• பின்னர் கடைந்து வைத்துள்ள தயிரை சேர்த்து, உப்பு வெந்த கடலைப்பருப்பு சேர்த்து குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வாழைத்தண்டு கலவையில் கொட்டி கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment