தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

உலகப் போரில் மறைக்கப்பட்ட உலகம்!

முதலாம் உலகப்போரின் போது வீரர்கள் இடைவிடா தாக்குதலில் இருந்து தப்பிக்க மறைந்து வாழ்ந்த குகைகளின் அற்புத புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த புகைப்படக்காரர் ஜெஃப் கஸ்கி மற்றும் எழுத்தாளர் இவான் ஹடிங்கம் ஆகியோர் பிரான்ஸ் நாட்டில் உள்ள குகைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
விலங்குகள் குகை தோண்டுவது போல், வீரர்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள நிலத்தில் குகை தோண்டி அடைக்கலம் தேடியுள்ளனர்.
உயிர் பயத்தில் இருந்த வீரர்கள் குகைகள் சிலவற்றில் தங்கள் சொந்த எண்ணங்களை செதுக்கியுள்ளனர். இதில் பெயர்கள், முகவரி, சமயம் மற்றும் நாட்டு பற்று அனைத்தையும் வெளிப்படுத்தி செதுக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இதில் மிகவும் அற்புத சிற்பம் என்னவென்றால் பிரான்ஸ் போர் வீரர் கடவுளை பிராத்திப்பது போல செதுக்கப்பட்ட சிற்பம் அனைவரின் கண்களையும் கண்ணீர் மழையில் நனைக்கின்றன.
இவர்கள் இருவரும் குகைகளுக்குள் செல்லும் போது நூற்றுகணக்கான பாட்டில்கள், காலணிகள், கவசங்கள், தலை கவசங்கள், மற்றும் படுக்கைகள் என அனைத்தையும் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக