தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 ஜூலை, 2014

செல்லக்குட்டி...சீக்கிரம் பேச வேண்டுமா?


குழந்தைகள் என்பதே அழகு தான்...அதிலும் அவர்களின் மழலை பேச்சு கேட்க கேட்க இனிமையா இருக்கும்.
ஆனால் எல்லாக் குழந்தையும் சீக்கிரம் பேசி விடாது.. சில குழந்தைகளுக்கு தாமதம் ஆகலாம்.
அந்த மாதிரியான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பேச சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கணும்.
* ஏதாவது ஒரு புதிய சொல்லை சொல்லிக் கொடுக்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த சொல்லை போட்டோவில் காமிக்காமல் நேரில் காண்பிப்பது நல்லது. அத்துடன் அந்த பொருள் எதற்கு உதவுகிறது என்பதையும் அவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கலாம்.
* குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, அதை அவர்களுக்கு அடிக்கடி காலை அல்லது மாலை நேரங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வருவதன் மூலம் அவர்களது மனதில் எந்தவொரு விடயமும் எளிதில் பதிந்துவிடும். அதுமட்டுமின்றி, அந்த சொற்களை திரும்ப திரும்ப சொல்லும் போது, அவர்கள் அதை எப்போதும் மறக்காமல் இருப்பார்கள்.
* குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பதன் மூலமும் விரைவில் பேச வைக்கலாம்..இவ்வாறு சொல்லிக் கொடுக்கும் போது அவர்களின் ஆர்வம் அதிகரிப்பதோடு உற்சாகமும் அடைவார்கள், எனவே எளிதில் கற்றுக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
* சில குழந்தைகள் சீக்கிரம் பேசாமல் இருப்பதற்கு அவர்களின் வெட்கமும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே அவர்களை அடிக்கடி வெளியில் அழைத்து சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பதன் மூலம் அவர்கள் வெட்கத்தை குறைக்கலாம்.
அப்படி விளையாடும் போது மற்ற குழந்தைகள் பேசுவதை பார்த்து பழகி அவர்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக