தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஜூலை, 2014

சர்க்கரை நோயை கண்டுபிடிக்க சூப்பர் வழி!

தற்காலத்தில் காணப்படும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.
இதில் குருதியிலுள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்தல், குறைவடைதல் என இருவகையான நோய்கள் காணப்படுகின்றன.
இவ்விரண்டு வகை நோய்களையும் மிகவும் துல்லியமாக கண்டறிவதற்கு மைக்ரோசிப் ஒன்று ஒருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஸ்டண்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர் பிரைன் பெல்ட்மான் என்பவரது தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் முன்னைய முறைகளை விடவும் மலிவாகவும், விரைவாகவும் நோயைக் கண்டறியக்கூடியதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
20 டொலர்கள் மட்டுமே பெறுமதியான இச்சிப்பின் மூலம் 15 வரையான சோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக