தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, July 21, 2014

ஹிட்லரை கொல்லமுயன்ற சதிகாரர்களை நினைவுகூர்ந்த ஜேர்மனி-இன்றைய தியாகி நாளைய துரோகி,இதுதான் காலநியாயம்!

ஹிட்லரை, ஜேர்மனி ராணுவ அதிகாரிகள் கொல்ல முயன்று தோற்றுபோன சதி திட்டத்தின் 70ம் ஆண்டு நினைவு நாளை சிறப்பு விழாவாக கொண்டாடியுள்ளனர்.
பெர்லினில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற அந்த நினைவு விழாவில், ஜேர்மனி அதிபர் பேசுகையில், இந்த நாளின் நினைவின் மூலம் ஜேர்மானியர்கள் தங்கள் உரிமைக்காகவும், மதிப்புகளுக்காகவும் தைரியமாக போராடக்கூடியவர்கள் என்பதை அறியமுடிவதாக கூறியுள்ளார்.
1944ம் ஆண்டு, யூலை 20ம் திகதி, ஸ்டாஃபன்பர்க் என்பவர் தலைமையிலான ராணுவ அதிகாரிகள் குழு ஒன்று, வுல்ஃப்ஸ் லையர் என்ற வெடிகுண்டினை, ஹிட்லரின் தலைமையகத்தில் உள்ள ஓக் மரத்திலான மேஜை அருகில் வைத்துள்ளனர்.
ஆனால் அந்த கொலை முயற்சியில் ஹிட்லரை தவிர உடனிருந்த மற்ற நால்வர் இறந்தபோதிலும், ஹிட்லர் லேசான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தின்றி தப்பித்தார்.
இதையடுத்து, அதிகாரி ஸ்டாஃபன்பர்க் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட மூன்று அதிகாரிகள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களை தவிர இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்திற்குள்ளான 200 பேர் சித்திரவதை முகாம்களில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அன்று ஹிட்லரை கொல்ல முயற்சி செய்ததன் மூலம் சதிகாரர்களாக பார்க்கப்பட்ட ராணுவ அதிகாரிகள், இன்று ஜேர்மானியர்களால் தேசப்பற்று மிக்கவர்களாக மதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment