தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 ஜூன், 2014

அடுத்த சூப்பர் ஸ்டார் ..!! புரியல...!


ஒரு விஷயம் எனக்கு புரியல...! 
அடுத்த சூப்பர் ஸ்டார் ..!!!!!! 

சிவாஜி இறந்தும் கூட அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கமல் 'நடிகர் திலகம்' பட்டத்துக்கு ஆசை படல..ஏன்னா, அவருக்கு தெரியும் 'நடிகர் திலகம்'ன்னா அது சிவாஜி ஒருவர் தான். ஆனா, 'சூப்பர் ஸ்டார்'ன்னா அது ரஜினி ஒருவர் தான்னு ஏன் விஜய் ஜோசப்புக்கு புரியல...?

சினிமா வரலாற்றில் என்.எஸ்.கே முதல் இப்போது வரை 'ஒரு நடிகரின் பட்டத்தை அப்படியே இன்னொரு நடிகருக்கு' கொடுத்திருக்கிறார்களா...? இல்லையே...பிறகு எதற்கு இந்த 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கு விஜய் இவ்வளவு அல்லல் படுகிறார்...??
விஜய் ஒரு சிறந்த நடிகர்ன்னா, மக்கள் திலகம் 'நடிகர் திலகம்' 'நடிக வேல்' .பட்டத்துக்கு ஆசை படனும்...இல்லேன்னா 'உலக நாயகன்' பட்டத்துக்கு ஆசை படனும்.இல்ல அந்த முயற்சியில் இறங்கி தன்னை நிருபித்து காட்டி இருக்கணும் .அதை விட்டு ..எந்த அடிப்படையில் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்துக்கு ஆசை படுறார்...?

ரஜினி ஒரு சிறந்த நடிகர்ன்னு அவரே ஏத்துக்கல...அப்புறம் எதுக்காக அந்த பட்டம்...??

அப்போ விஜய் எதுக்கு ஆசைப்படுறார்ன்னு நீங்களே புரிஞ்சிக்கங்க..!

வேறு எதையோ நோக்கி பயணப்பட இதை ஒரு வழிப்பாதையாக பார்க்கிறார் போல ..! மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காமல் இருப்பதே நல்லது ..!

எல்லோரும் எல்லோரையும் போல எப்பவும் ஆக முடியது ..! அவங்க அவங்களுக்கு தனித்தன்மை இருக்கு ..நான் நீ ஆவதும் நீ நானவதும் சாத்தியம் இல்லாத ஓன்று..!


சாம் மகேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக