தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, June 25, 2014

சுட்டிகளை சுண்டி இழுக்கும் க்ரீன் இட்லி!

இந்த காலத்துல குழந்தைகளை சாப்பிட வைக்கிறது ரொம்பவே கஷ்டம்.
எதிலயுமே வித்தியாசமான இருக்கணும்னு நினைக்குறாங்க. அவங்களுக்கு ஏற்றபடி சுவையான, கலர்புல்லான உணவு தான் இந்த க்ரீன் இட்லி.
இந்த உணவை எப்படி செய்றதுன்னு இங்கு பார்க்கலாம்.
தேவையானவை
குட்டி இட்லி - 20 (அல்லது பெரிய இட்லியை 4, 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்)
புதினா, கொத்தமல்லி - தலா ஒரு சிறு கட்டு
தேங்காய் துருவல் - அரை கப்
புளி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப)
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
புதினா, கொத்தமல்லியை அலசி, சுத்தம் செய்யவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து... புதினா, கொத்தமல்லி, புளி, தேங்காய் துருவல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஆறவைத்து, அரைத்துக் கொள்ளவும்.
நெய்யை காய வைத்து, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... அரைத்து வைத்த சட்னி, குட்டி இட்லிகளைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment