தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 29, 2014

சத்தான வெஜிடபிள் சொதி

சொதி என்பது இலங்கையில் வசிப்பவர்கள் விரும்பி சாப்பிடும் ரெசிபி.
பொதுவாக சொதியை தேங்காய் பாலில் ருசியாக செய்வார்கள், ஆனால் காய்கறியிலும் சொதி செய்யலாம்.
தேவையானவை
கேரட் – 1, பீன்ஸ் – 10, குடமிளகாய் – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய்ப்பால் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.
தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்.
செய்முறை
கேரட்டை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸ், குடமிளகாயையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை கடாயில் போட்டு, மூடி வேக வைக்கவும். பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.

No comments:

Post a Comment