தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 ஜூன், 2014

கின்னஸில் இடம்பிடித்தார் தாய்லாந்தின் பெண் !


தாய்லாந்தைச் சேர்ந்த சுபத்ரா சசுபான் துரதிர்ஷ்டமான ஆனால் வியக்கத்தக்க வகையில் கின்னஸ் உலக சாதனை நூலில் இடம்பிடித்துள்ளார். 14 வயதான இந்தப் பெண்ணின் உடலெங்கும் முடிகள் முளைத்துள்ளன. இதனால் உலகிலேயே முடி அடர்ந்த பெண் என்று இவரை கின்னஸ் சாதனை நூல் பதிவு செய்துள்ளது. சுபத்ராவுக்கு ஹைபர்டிரிகோசிஸ் என்னும் மரபணுவியல் கோளாறு உள்ளது. இதனால் அவருடைய உட லெங்கும் முடிகள் முளைத்துள்ளன. இந்த ஹார்மோன்கள் பிரச்சனையால் அவருடைய முகமெங்கும் முடிமுளைத்துள்ளது. அவருடைய தாயார் அடிக்கடி அவருடைய முகத்தில் உள்ள முடிகளை ஒழுங்குபடுத்தி வெட்டி விடுகிறார். .இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர் மற்ற குழந்தைகளின் கேலிக்கும் கிண் டலுக்கும் ஆளானார். அவர்கள் அவரை குரங்கு பெண் என்றும், ஓநாய் பெண் என்றும் நக்கலடித்தனர். வீதியில் செல்வோர் கூட நின்று அவரைச் சுட்டிக் காட்டி பேசுவதைக் கண்டு அவர் கண்ணீர் வடித்துள்ளார். நாட் என்று செல்ல மாக அழைக்கப்படும் இவருக்கு கின்னஸ் சாதனையாளர் பட்டம் கிடைத்தவுடன் அவருக்கு பள்ளியில் மிகுந்த மவுசு ஏற்பட்டதுடன், அவரைக் கிண்டலடித்தவர்கள் அவருடன் நட்பு கொள்ள விழைந்தனர். கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த விருது தனது நம்பிக்கையை உயர்த்தியுள்ளது என்றும் அதற்குப்பின் நடனம், பாட்டு, நடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதாக சுபத்ரா தெரிவித்தார். கடினஉழைப்பு கொண்ட சிறந்த மாணவியான இவர் மருத்துவர் ஆக விருப்பம் தெரிவித்துள்ளார். வளர்ந்த பின் மற்றவர்களுக்கு உதவுவதுடன், அவர்களை குணப்படுத்தவும் விரும்புவதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக