தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 30, 2014

மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி ------------------------------------------------------------------------------


முழுக்க முழுக்க இந்திய வழிபாட்டு முறையின் இறைமைச் சின்னமான அங்கோர் வாட் ஆலயத்தின் பரந்த தோற்றம் இது. 

இக்கோவில், இன்றைய கம்போடிய நாட்டில் வானாந்திரப்பகுதியில் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள ஆலயங்களை விட மிகப்பெரியது இது எனது உண்மையல்ல; நமது திருவரங்கம் கோவிலின் பரப்பளவைப் போன்றது எனக் கூறலாம்.

இன்றைய கம்போடிய தேசத்தில் இதை ஓர் பௌத்த வழிபாட்டு முறையில் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

இக்கோவிலைப்பற்றிய தகவல்கள் இவை: இது ’உலக தமிழர்கள் ஒன்று சேருவோம்’ என்ற முகநூல் நண்பர் தொகுத்திருக்கும் தகவல்களின் சுருக்கம் கீழே:

////உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம்#கம்போடியா நாட்டில் உள்ள “#அங்கோர்#வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான்.

இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.

பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது.

பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐப் பொறித்துள்ளது.

எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது.

இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றுச் சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்!

இந்த கோயிலிலை உருவாக்கும் ஆரம்பக்கட்டப் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கின. . இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தன.

இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர்
இந்தக் கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்குப் பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடையத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது,

அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!

இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது..

இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் இந்தக் கோயில் தான் “தேசிய சின்னமாக”ப் பொறிக்கப்பட்டுள்ளது!.

இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை. வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.////

இன்றைய கம்போடியாதான் புராண காலத்து காம்போஜம்; நமது புராண காலத்து தேசங்கள் 56 ல் இக்கோவில் காம்போஜம் என்ற தேசத்துக்கு உரியதா அல்லது அங்க தேசத்துக்கு உரியதா என்பதை வரலாறுகள் மாறிப்போன பின் உணர்ந்து சொல்ல மகான்களால்தான் முடியும்.

எப்படி இருந்தாலும் அன்றைய அங்க தேசத்தின் கோவில் இது என்பதும் இங்குதான் கர்ணன் வழிபாடு செய்தான் என்பதும் நமது யூகத்தால் உணர முடியும்.(கர்ணனை த் துரியோதனன் அங்க தேசத்தின் மன்னனாக முடி சூட்டினான் என்கிறது மகாபாரதக் கதை)

இந்த அங்கோர்வாட் ஆலயத்தைப் பற்றிய அரைகுறைத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு அரசன் சூர்ய வர்மன் கட்டியதாகவும் 27 ஆண்டுகள் தொடர்ந்து இதன் கட்டிடப் பணிகள் நடந்து முடிந்ததாகவும் செய்திகள் பரவுகின்றன.

உண்மையில் மேலே உள்ள தகவலின்படி,சூர்ய வர்மன்,ஜெய வர்மன் என்ற பெயர்கள் எல்லாம் இங்கு தமிழ் நாட்டு சேர சோழ,பாண்டிய அரசர்களின் பெயர்களாக இல்லை; குறிப்பாகப் புகழ் பெற்ற மன்னர்களின் வரிசையில் இல்லை.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை விடவும் பெரிதான அங்கோர்வாட் கோவில் இந்து கலாசாரத்தின் சின்னமான போதிலும் இந்துக் கலாசாரமே அற்றுப்போன இன்றைய கம்போடியாவில் இருப்பது, உலகின் எந்த ஆராச்சியாளர்களுக்கும் ஓர் புதிர்தான்.

வரலாறுகள் மறைக்கப்பட்டதற்கும் தவறான வரலாறுகள் புகுத்தப்பட்டதற்கும் வரலாற்றையே உணராதிருப்பதற்கும் இந்த அங்கோர்வாட் உதாரணம்.

புராண காலத்தில் குறிப்பிட்டப்பட்ட அங்கம்,அவந்தி,கூர்ஜரம்,
காந்தாரம் முதலான 56 தேசங்கள் பற்றிய ஆய்வுகளை யாரும் எந்த மானுடவியலாரும் அக்கறையோடு செய்து உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பழைய ஏற்பாட்டுக் காலத்து உலக வரைபடத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது. ஆனால் பண்டைய உலகின் மொழியிலையயும் கலாசாரம் மற்றும் சமூகவியலையும் அது முழுமையாகப் பிரசுரிக்கவில்லை.காரணம்,கிறித்துவத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு குறுகிய ஆய்வுகள் மூலம் உண்மைகளைச் சொல்லாமல் இருப்பதுதான்.

மகாபாரத காலம் என்பது இன்றைய சரித்திர காலத்துக்குச் சற்றே முந்தியது என்பதை வரலாறும் மானுடவியலும் அறிந்தோர் புரிவார்கள்.

யுனெஸ்கோ இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வுகள் நடத்தி இந்திய இதிகாசத்தின் செய்திகளின் உண்மைகளை வெளிக் கொணர்ந்தால் அங்கோர்வாட் போன்ற வேறு தேசங்களிலும் இந்திய வழிப்பாட்டு முறைகள் எப்படி ஆட்சி கொண்டிருந்தன என்ற உண்மைகளை உலகம் அறியும்.

உலகின் மூத்த கலாச்சாரமும் இந்தியாவினுடையதுதான். மூத்த பண்பட்ட குடிகளும் இந்தியர்தாம்.

No comments:

Post a Comment